Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி ஒரு புத்திசாலி.. வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடி ஒரு புத்திசாலி எனவும் புகழ்ந்து பேசியுள்ளார். வரி விதிப்பு தொடர்பான கேள்விக்கு டிரம்ப் இவ்வாறு கூறியிருப்பது பரஸ்பர வரி விதிக்கும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சில சாதகமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் எழத்தொடங்கியிருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 2 ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, அமெரிக்கா பொருட்கள் மீது பிற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்கள் மீது வரியை அமெரிக்கா விதிக்கும் என்பதே டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரியாகும்.

indian-pm-modi-is-very-smart-man-us-president-trump-presented-a-positive-front-on-tariff-issue-with

வரிகளின் அரசன் இந்தியா

டிரம்பின் இந்த முடிவால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்த போரினால் சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு என பல பிரச்சினைகள் எழலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் தப்பவில்லை. இந்தியாவும் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் பல முறை விமர்சித்து வருகிறார்.

இந்தியாவை வரிகளின் அரசன் என்றே கூட விமர்சனம் முன்வைத்தார். அமெரிக்காவின் நட்பு நாடாக அறியப்படும் இந்தியா மீதும் பாரபட்சம் இன்றி டிரம்ப் அறிவித்த வரி விதிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு டிரம்ப் சாதகமான பதிலை அளித்து இருக்கிறார். டொனால்டு டிரம்ப் இது தொடர்பாக கூறியதாவது:-

மோடி புத்திசாலியான நபர்

பிரதமர் மோடி மிகவும் புத்திசாலித்தனமான நபர். சமீபத்தில் இங்கு வந்து இருந்தார். நாங்கள் எப்போதும் மிக சிறந்த நண்பர்களாக உள்ளோம். அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. இது கொடூரமானது. பிரதமர் மோடி எனக்கும் சிறந்த நண்பராக உள்ளார். நாங்கள் சிறப்பான முறையில் ஆலோசனை நடத்தினோம். இந்தியாவிற்கும் நம் நாட்டிற்கும் இடையே இது மிகச் சிறப்பாக பலனளிக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையிலான கார்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த மறுநாளே டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. கார்கள் மீது விதிக்கப்படும் இந்த வரியால் அமெரிக்காவில் விற்பனையாகும் கார்களில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் தாக்கம் ஏற்படும் என்று தெரிகிறது. வெளிநாடுகளில் அசம்பிள் செய்து அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அமெரிக்க கார் நிறுவனங்களுமே இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படும்.

சமாதானமாக செல்ல இந்தியா முடிவு

முன்னதாக பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டன் டிசி சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து இரு தரப்பு ஆலோசனை நடத்தினார். டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் தேசிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு உருவாக்குதல், வளர்ச்சியை ஊக்குவித்தல் என பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது, டிரம்பின் வரி விதிப்பை தவிர்க்கும் விதமாக அமெரிக்காவுடன் சமாதானமாக செல்ல இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 23 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1.91 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு வரி குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை வைத்தே டிரம்ப், மேற்கண்டவாறு தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் எனத்தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+