இரவோடு இரவாக.. அமெரிக்காவை கதறவிட்ட ஈரான்! வெள்ளை மாளிகைக்கு ஓடிய பிடன் - கமலா! போர் ஸ்டார்ட்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அறிவித்தப்படியே ஈரான் தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் மற்றும் ஈரான் நாட்டு ராணுவத்தின் கூட்டு தாக்குதலாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஈராக்கில் உள்ள இராணுவத் தளத்திற்கு எதிரான தாக்குதலில் குறைந்தது ஐந்து அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் முற்றியது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்த முடிவு செய்து உள்ளது.

iran israel palestine

கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிஹ் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஹமாஸ் அமைப்புதான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது. சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் இதேபோல் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவை பெற்று இஸ்ரேலில் போர் செய்து வருகிறது. லெபனாலில் இருந்து இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இந்த இரண்டு அமைப்புகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டது, சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், இஸ்ரேல் பாலஸ்தீன போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, பாலஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதற்கு பழிவாங்கவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது என்றால் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும் தாக்குதல்களை கண்டிப்பாக நடத்தும். அதன்படி, அறிவித்தப்படியே ஈரான் தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் மற்றும் ஈரான் நாட்டு ராணுவத்தின் கூட்டு தாக்குதலாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு தாங்கள்தான் காரணம் என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

இதை எல்லாம் மனதில் வைத்தே தற்போது ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் உள்ள இராணுவத் தளத்திற்கு எதிரான தாக்குதலில் குறைந்தது ஐந்து அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று அவசரமாக அதிபர் பிடன் வெள்ளை மாளிகையில் கமலா ஹாரிஸ் உடன் ஆலோசனை செய்தார்.

உலகப்போர் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நேற்று வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்புக் குழுவைச் சந்தித்தார். அங்கே அவசர அவசரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். ஈரான் இஸ்ரேல் மீதோ, அமெரிக்க ராணுவ மையங்கள் மீதோ போர் தொடுத்தால் அது கண்டிப்பாக உலகபோராக மாறும்.

இதனால் என்ன செய்யலாம்.. போர் வரும் முன் முன்கூட்டியே தாக்குதல் நடத்தலாமா அல்லது ஈரான் தாக்கிய பின் பதில் தாக்குதல் கொடுக்கலாமா என்று ஆலோசனைகளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+