ஜான்சன் & ஜான்சன் பவுடரால் வந்த கேன்சர்.. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.126 கோடி நஷ்ட ஈடு.. கோர்ட் அதிரடி!
நியூயார்க்: பல வருடங்களாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதன் விளைவாக புற்று நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வென்றுள்ளார்.
ஜான்சன் & ஜான்சன் பவுடர் காரணமாக ஒரு அரிய வகை புற்றுநோயான மீசோதெலியோமா காரணமாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய கனெக்டிகட் நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு நடுவர் மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்திய மதிப்பில் 126 கோடி ரூபாயை அந்த நிறுவனம்.. அவருக்கு செலுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரான இவான் ப்ளாட்கின், 2021 ஆம் ஆண்டில் தனக்கு இந்த கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மனுவில் கூறியள்ளார். தனக்கு இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மருத்துவ சோதனைகளை செய்துள்ளார். ஜே&ஜேவின் பேபி பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு இந்த கேன்சர் வந்ததை சோதனைகள் மூலம் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து அந்த நிறுவனம் காரணமாகவே தான் கேன்சர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி, அந்த நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்.
ஃபேர்ஃபீல்ட் கவுண்டி, கனெக்டிகட் சுப்பீரியர் கோர்ட்டில் உள்ள நடுவர் மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜான்சன் & ஜான்சன் பவுடர் காரணமாக ஒரு அரிய வகை புற்றுநோயான மீசோதெலியோமா காரணமாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய கனெக்டிகட் நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதோடு ஜான்சன் & ஜான்சன் பவுடர் நிறுவனம் இது போக அந்த நபருக்கு கூடுதல் சேதங்களைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. கூடுதல் சேதங்களை எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது இந்த வழக்கை மேற்பார்வையிடும் நீதிபதியால் பின்னர் தீர்மானிக்கப்படும்.
கேன்சர்: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பல கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை இவர்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
பவுடர், சோப், ஷாம்பு என்று மிக அத்தியாவசியமான பொருட்களை இவர்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களின் நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.சில ஆங்கில ஊடகங்கள் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டியும் அந்த கட்டுரைகளில் இருந்தது.
இந்த நிலையில் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்புகளை சோதனை செய்தது. 100 விதமான இடங்களில் பல்வேறு விதமான பொருட்களை சோதனைசெய்தது. தயாரிப்பு கூடம் , விற்பனை கூடம் என்று பல இடங்களில் இது தொடர்பாக சோதனை செய்தது.
இந்த புகார்கள் மற்றும் சோதனைகள் காரணமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்த புகார்கள் காரணமாக மொத்தமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4 கோடி டாலர் வரை பங்கு சந்தையில் இழப்பு ஏற்பட்டது. இது அந்த நிறுவனத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.












Click it and Unblock the Notifications