இன்னைக்குதான் கடைசி நாளா? பூமியை நெருக்கமாக கடந்து செல்லும் 3 விண்கற்கள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நியூயார்க்: விண்கற்களால் பூமிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இன்று பூமியை நெருக்கமாக 3 விண்கற்கள் கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. ஒருவேளை இந்த விண்கற்கள் பூமியை தாக்கினால் பேரழிவு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்களால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் நேற்று பூமிக்கு அருகே விண்கற்கள் மூன்று கடந்து செல்ல இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது.
2024 QU, 2024 QE2 மற்றும் 2024 RB எனும் பெயர் கொண்ட விண்கற்கள்தான் இன்று பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இதில் '2024 QU' எனும் விண்கல்தான் மிகப் பெரியது. சுமார் 120 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், பூமியை 28 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது. இது ரொம்ப தூரமாக தெரியலாம். ஆனால், பூமிக்கும் அடுத்து உள்ள கோளுக்கும் இடைப்பட்ட தூரத்தை விட இது குறைவுதான்.
இப்படி இருக்கையில் விண்கல்லின் பாதையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட, அது பூமிக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்த விண்கல் பூமியில் மோதினால், 10 அணு குண்டு ஒரே நேரத்தில் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ, அதை இது ஏற்படுத்தும். மட்டுமல்லாது இந்த விண்கல் விழுந்த இடத்தில் 2 கி.மீ விட்டத்திலும், 660 மீ ஆழத்திலும் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும்.
விண்கல் விழுந்த இடத்திலிருந்து 200 கி.மீ வரை ரிக்டர் 7 அளவில் நிலநடுக்கம் ஏற்படும். மட்டுமல்லாது இது விழுந்த இடத்தை சுற்றி 10 கி.மீக்கு எந்த கட்டிடங்களும் இருக்காது. ஒருவேளை இது கடலில் விழுந்தால், விழுந்த இடத்திலிருந்து 500 கி.மீ பரப்பளவு உள்ள பகுதிகள் கடுமையான சுனாமியால் பாதிக்கப்படும்.
இந்த விண்கல்லை தவிர மற்ற இரண்டு விண்கல்லும் 30-36 அடி அளவில்தான் இருக்கும். எனவே, பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications