Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்தரத்தில்" மிதந்த பாட்டில்.. அதுக்குள்ளே பேப்பர்.. அதுக்குள்ளே அந்த மெசேஜ்.. பீச்சில் ஒரே விநோதம்

பாட்டிலில் உள்ள பேப்பர் மெசேஜை எழுதியவர் யார் என்ற ஆராய்ச்சியில் இறங்கி உள்ளார் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: எப்போது தனக்கு அதிர்ஷ்டம் வரும்? எந்த திசையில் இருந்து வரும் என்று ஒருநபர் தவமாய் தவம் கிடைக்கிறார்.. இங்கில்லை.. அமெரிக்காவில்...!

அமெரிக்காவின் உட்டாஹ் மாகாணத்தை சேர்ந்தவர் கிளின்ட் பஃபிங்டன்.. இவர் ஒரு ஜாலி பேர்வழி.. எங்காவது அடிக்கடி ஊர் சுற்றிக் கொண்டே இருப்பார்.. எங்காவது ஏதாவது சுவாரஸ்யம் நடந்தால் அங்கு கரெக்ட்டாக ஆஜர் ஆகிவிடுவார் கிளிண்ட்..

அப்படித்தான், கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறையை கழிப்பதற்காக கரீபியனுக்கு சென்றிருக்கிறார். அப்போது பீச்சின் அழகை ரசித்து கொண்டேயிருக்கும்போது, திடீரென ஒரு பாட்டில் தண்ணீரில் மிதந்துகொண்டே வந்தது..

 சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

அந்த பாட்டில் அப்படியே கரைஒதுங்கி கிடந்தது.. அதை பார்த்ததுமே கிளிண்ட்டுக்கு ஆர்வமாகிவிட்டது.. அதனால், அந்த பாட்டிலை எடுத்து பார்த்தால், அதற்குள் பேப்பர் ஒன்று சுருட்டப்பட்டு இருந்திருக்கிறது.. அதை பார்த்ததும் கிளிண்ட்டுக்கு இன்னும் ஆச்சர்யம் அதிகமாகிவிட்டது.. அதனால், அந்த பேப்பரை உடனடியாக பிரித்து படித்தார்.. அதில் உள்ள வாசகம்தான், கிளிண்ட் வாழ்க்கையை தற்போது அடியோடு மாற்றிவிட்டது.

 பீச் + பாட்டில்

பீச் + பாட்டில்

"இந்த பேப்பரில் உள்ள செய்தியை படிப்பவர்களுக்கு விரைவில் அதிர்ஷ்டம் வந்து வரும்" என்று எழுதப்பட்டிருந்தது.. இதை பார்த்ததும், அதற்கு மேல் திக்குமுக்காடிப்போய்விட்டார் கிளிண்ட்.. இந்த பாட்டில் எப்படி கடலுக்கு போயிருக்கும்? யார் இப்படி வாசகத்தை எழுதி பாட்டிலில் போட்டிருப்பார்கள்? என்று ஆர்வம் அதிகமாகியது.. அதனால், அந்த பாட்டிலை தேடி யாராவது அங்கு வருகிறார்களா? என்று பீச்சிலேயே காத்திருந்தார்.. யாருமே வரவில்லை. அது யாராக இருக்கும் என்றுதான் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்.

 பேப்பர் மெசேஜ்

பேப்பர் மெசேஜ்

இதை பற்றி கிளிண்ட் சொல்லும்போது, "வாஷிங்டனில் உள்ள பெக்கி & போர்ட்லேண்டில் உள்ள ஜிம் ஆகிய 2 பேரால் இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது... பெக்கி மற்றும் ஜிம் ஆகியோர் 2018ம் ஆண்டில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஜாக்சன்வில்லி பீச்சில் இருந்து இந்த பாட்டிலை வீசியிருக்கிறார்கள்.. இதெல்லாம் அந்த பேப்பர் மெசேஜ் மூலம் தெரியவந்திருக்கிறது.. அந்த பேப்பரில் ஒரு மெயில் ஐடியும் இருந்தது.. அதை பார்த்துதான் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது.. அந்த மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பினேன்.. ஆனால் இன்னும் அதற்கு பதில் வரவில்லை.. இருந்தாலும், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் இந்த செய்தியை எழுதிய பெக்கி மற்றும் ஜிம் ஆகியோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் என்றார் கிளின்ட்.

 பெரிய சீக்ரெட்

பெரிய சீக்ரெட்

அதுமட்டுமல்ல, கடலில் ரகசிய செய்திகளுடன் மிதக்கும் பாட்டில்களை கண்டறிந்து, அவைகள் குறித்தும் தன்னுடைய பிளாக்கில் பதிவிட்டு வருகிறார்.. அத்துடன் பல நண்பர்களையும் அவர் சேர்த்திருக்கிறார். இந்த வித்தியாசமான முயற்சி மற்றும் சவாலை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டுள்ளனர்.. இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. எங்கெல்லாம் ரகசியம் இருக்கிறதோ, அந்த சீக்ரெட்டை கண்டுபிடிப்பதுதான் கிளிண்ட் வேலையாம்.. கடந்த 2011-ல் இருந்தே இந்த பணியில் அவர் ஈடுபட்டு வந்தாலும், பேப்பர் மேசேஜ் சீக்ரெட்டுக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லையாம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+