13 வயசு பையனுக்கு.. தன் நிர்வாண போட்டோவை அனுப்பிய ஸ்கூல் டீச்சர்.. ஜார்ஜியாவில் ஒரு அக்கப்போர்
13 வயது சிறுவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பிய உள்ளார் இந்திய ஆசிரியை
நியூயார்க்: 13 வயசு பையனுக்கு.. தன்னுடைய ஆபாச போட்டோக்களையே அனுப்பி வைத்துள்ளார் ஸ்கூல் டீச்சர் ஒருவர்.. ஜார்ஜியா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட டீச்சர் இந்தியாவை சேர்ந்தவராம்.. அதனால் அவரை நாடு கடத்தப்படலாம் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் ரூமா பைரபகா.. 24 வயது இளம்பெண்.. ஜார்ஜியாவின் எப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார்.. சயின்ஸ் பாடம் நடத்துகிறார்.. சோஷியல் சயின்ஸ் பாடப்பிரிவையும் மாணவர்களுக்கு நடத்துகிறார்.
இவர்தான் 13 வயது சிறுவனுக்கு ஆபாச போட்டோக்களை அனுப்பி வைத்து, தவறாகவும் நடந்து கொண்டதாக கூறப்பட்டது.. அதே பகுதியை சேர்ந்தவன்தான் இந்த சிறுவன்.

நிர்வாண போட்டோக்கள்
ஆரம்பத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை சிறுவனுக்கு அனுப்பும் அளவுக்கு வந்துவிட்டது. விஷயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். அதனால் கடந்த ஜனவரி 16ம் தேதி டீச்சர் கைது செய்யப்பட்டார். இவருக்கு அமெரிக்க குடியுரிமையும் இல்லை.

பாஸ்போர்ட்
ஒருவேளை போலீஸ் காவலில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டால், குடியேற்றக் காவலில் ஒரு கூட்டாட்சி தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார் என்கிறார்கள். அப்படியானால், பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட 18 வயதிற்கும் கீழுள்ள யாரையுமே இனி டீச்சர் சந்திக்ககூடாது, அவரது பாஸ்போர்ட்டையும் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் பத்திரம்
ஆகஸ்டா குரொனிக்கல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சிறுவர் துன்புறுத்தல், அநாகரீகமான நோக்கங்களுக்காக ஒரு குழந்தையை கவர்ந்திழுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட டீச்சர் மீது பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 27,700 அமெரிக்க டாலர் ஜாமீன் பத்திரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் ஆகும்.

நாடு கடத்தல்?
டீச்சர் ரூமா, இப்போது, மாணவர் விசாவில்தான் அமெரிக்காவில் தங்கி உள்ளார்.. ஆனால் இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.. அப்போது வக்கீல்கள் இதை பற்றி தெரிவிக்கும்போது, சிறுவனுக்கும் டீச்சர் மீது காதல் உள்ளது... அதனால் டீச்சரை பல சமயங்களில் வீட்டிற்கு தெரியாமல் போய் சந்தித்துள்ளான் என்று கூறுகிறார்கள்.. ஆனால் நிலைமை மோசமானால், அவர் நாடு கடத்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.. !












Click it and Unblock the Notifications