கொரோனா ஆராய்ச்சி.. முக்கிய கண்டுபிடிப்பை வெளியிடும் முன் சுட்டுக்கொலை.. அமெரிக்காவில் சீனர் மர்ம பலி
அமெரிக்காவில் கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்து வந்த ஆராய்ச்சி பேராசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்து வந்த ஆராய்ச்சி பேராசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் சீனாவை சேர்ந்தவர் என்பதால் நிறைய சந்தேகங்கள் இந்த கொலையில் எழுந்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனா குறித்த நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் தன்மை மற்றும் பண்புகள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இன்னும் சிலர் கொரோனாவின் தோற்றம் என்ன என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். முக்கியமாக அமெரிக்காவில் பல ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவின் தோற்றம் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

யார் இவர்?
இப்படி கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்து வந்தவர்தான் ஆராய்ச்சி பேராசிரியர் பிங் லியு. 37 வயதான இவர் அமெரிக்காவின் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் இருக்கும் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்து இருக்கிறார். இவர் கொரோனா குறித்த ஆராய்ச்சி பணிகளை செய்து வந்து உள்ளார். மிக தீவிரமாக கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தும் வகையில் இந்த ஆராய்ச்சியை செய்து உள்ளார். கோவிட் 19ஐ ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது.

செல்கள் எப்படி
அதன் செல்கள் எப்படி உள்ளது. செல்கள் இயங்கும் திறன் எப்படி உள்ளது. பழைய கொரோனா வைரஸ் செல்களுக்கும் இந்த புதிய கொரோனா வைரஸ் செல்களுக்கும் என்ன வேறுபாடு, எங்கே மாறுபட்டு இருக்கிறது. அதை எப்படி மட்டுப்படுத்துவது என்று ஆராய்ச்சி செய்து வந்துள்ளார். அதோடு இந்த வைரஸின் தோற்றத்தை இந்த ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.

எத்தனை நாட்கள் ஆராய்ச்சி
சுமார் இரண்டு மாதமாக அவர் இந்த ஆராய்ச்சியை செய்து வந்துள்ளார். இந்த ஆராய்ச்சியின் முடிவை அவர் நெருங்கிவிட்டார் என்று கூறுகிறார்கள். மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்றை அவர் நிகழ்த்தி உள்ளார். அதை வெளியிடும் திட்டத்தில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி இருக்கும் நிலையில்தான் அவர் கடந்த வாரம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொடூர கொலை
அவரின் வீட்டிற்குள் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் கழுத்து, தலை, வயிறு ஆகிய இடங்களில் குண்டடி இருக்கிறது. இவரின் நண்பர் ஹவ் கு என்ற இன்னொரு சீனரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் வெளியே காரில் இருந்துள்ளார். இவர் ஏன் அங்கே வந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இவர் யார் என்பதும் தெரியவில்லை.

சீன கொலை
இவர்களை சீனர்கள் என்பதற்காக கொல்லவில்லை. இதற்கு பின் வேறு காரணம் இருக்கலாம் என்று அம்மாகாண போலீஸ் தெரிவித்துள்ளது. இவர் கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்து வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என்று ஏற்கனவே புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் சீனர் ஒருவர் கொல்லப்பட்டது என்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications