Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட்.. வெடித்து கிளம்பிய போராட்டம்! பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாறிய யூதர்கள்.. அப்போ இஸ்ரேல்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 22வது நாளாக இன்றும் காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவரக்கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் சர்வதேச அளவில் போராட்டங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. சில இடங்களில் யூதர்களே தங்கள் சொந்த நாட்டு ராணுவத்திற்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் கடந்த 7ம் தேதி ஏவுகணைகளை வீசி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்தது. இந்த தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களுக்காக ஹமாஸ் படையை அழிக்கப்போவதாகவும் கூறி இஸ்ரேலின் பாதுகாப்புப்படை பதில் தாக்குதலை தொடுத்தது. இப்படியாக கடந்த 22 நாட்களாக காசா மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் 3,000 குழந்தைகள் உட்பட 7,326 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 32 பத்திரிகையாளர்கள், 35 ஐநா செயற்பாட்டாளர்களும் அடக்கம்.

 The Jews started the protest demanding an end to Israels war on Palestine

குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்படுவது ஒருபுறம் இருக்கையில் மறுபுறம், காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. இம்மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா உட்பட ஏராளமான நாடுகள் உதவி பொருட்களை அனுப்பி வைத்திருக்கின்றன. ஆனால் அவற்றில் சொற்பமான அளவில்தான் காசா எல்லைக்குள் விடப்படுகிறது. மற்றவை இஸ்ரேலால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

தினம் தினம் கேட்டும் வெடிகுண்டு சத்தம், மருத்து பொருட்கள் இல்லாமல் மரித்து போகும் முதியோர்கள், கர்ப்பிணிகள், உணவு, தண்ணீருக்காக போராடும் குழந்தைகள் என காசா நரகமாக மாறியிருக்கிறது. உடனடியாக போரை நிறுத்தினால் மட்டுமே இயல்பு நிலை திரும்ப வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில் இதற்காக பல்வேறு நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யா, சீனா, அரபு நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளன.

போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும், சீனாவும் மேற்கொண்ட முயற்சிகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று தொடங்கிய ஐநா பொதுக்குழு கூட்டத்தில் ஜோர்டன் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் மூன்றில் 2 பங்கு உறுப்பு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட நிலையில், தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. எனவே இந்த தீர்மானம் இஸ்ரேலை கட்டுப்படுத்தாது.

ஐநாவுக்கு வெளியே பொதுமக்களும் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதாவது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என உலகம் முழுவதும் 22 நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழ்நாட்டில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாகவும், மே 17 இயக்கம் சார்பாகவும், இடதுசாரிகள் சார்பாகவும் சில போராட்டங்கள் நடந்திருக்கின்றன. கல்வி நிலையங்களிலும் இடதுசாரி மாணவர் இயக்கமான, இந்திய மாணவர் சங்கத்தினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டம் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு பிம்பத்தை உலகம் முழுவதும் கட்டமைக்க தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த போராட்டத்தில் யூதர்களே ஈடுபட தொடங்கிவிட்டனர். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள கிராண்ட் சென்டரல் ஸ்டேஷனில் கருப்பு நிற டீசர்ட் அணிந்துக்கொண்டு யூதர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல பாலஸ்தீனத்திற்கும் தங்களது ஆதரவை அளித்துள்ளனர். இதற்கெல்லாம் உச்சமாக இஸ்ரேல் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓஃபர் காசிப், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார். இதன் காரணமாக அவர் அந்நாட்டின் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார். இஸ்ரேலுக்கு எதிராக சொந்த யூத மக்களே குரல் எழுப்பியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+