துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து?
நியூயார்க்: ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா தனது இலக்கை நெருங்கி விட்டதாகவும், தேவையானால் மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்த தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதனால் வளைகுடா பகுதியில் உள்ள பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்க வான் படைத தளங்களுக்கு அனுமதி அளித்து வரும் கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா பகுதியில் உள்ள பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பதற்றத்தில் உள்ளன.
டொனால்ட் டிரம்ப்
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும், முக்கிய இலக்குகளை அடைந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறி உள்ளார். வெளை மாளிகையில் பேசிய அவர்," ஆரம்பத்தில் திட்டமிட்டபடியே இந்த போரில் அமெரிக்க படைகள் செயல்பட்டு வருகிறது. தேவையானால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவோம். தற்போது அமெரிக்க படைகள் போரில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானுக்கு எச்சரிக்கை
எதிரிகள் பலவீனமடைந்து வருகின்றனர். இதனால், இந்த போரின் முடிவு விரைவில் அமெரிக்காவுக்கு சாதகமாக அமையும். ஈரானின் ராணுவ திறன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படை அமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளது. மேலும், ஏவுகணை தயாரிக்கும் நிலையங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மத்திய கிழக்கு
இந்த போரில் அமெரிக்காவுக்கு ஆதரவளித்த மத்திய கிழக்கு நாடுகளுக்கும் நன்றி . குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் வழங்கிய ஆதரவு இந்த போரில் முக்கிய பங்காற்றியது. அதே நேரத்தில், ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு கதவுகள் திறந்த நிலையில் தான் உள்ளது. ஆனால் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்றால், ஈரானின் முக்கிய மின்சார உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்த தயார் நிலையில் அமெரிக்கா உள்ளது.
அயத்துல்லா அலி காமேனி
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், இஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா, ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தரப்பும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த போரின் தாக்கம் உலகளாவிய அளவிலும் உணரப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
குறிப்பாக உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நீரிணை வழியாக உலகின் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் பயணிப்பதால், அதன் மூடல் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications