ஏர்போர்ட்டுக்குள் எகிறி குதித்து விமானத்தை திருடிய பள்ளி சிறுவர்கள்.. பறந்து எஸ்கேப் ஆனதால் பரபரப்பு
அமெரிக்காவில் இரண்டு பள்ளி சிறுவர்கள் விமானம் நிலையம் ஒன்றில் திருட்டுத்தனமாக புகுந்து விமானத்தை கடத்தி சென்று இருக்கிறார்கள்.
நியூயார்க்: அமெரிக்காவில் இரண்டு பள்ளி சிறுவர்கள் விமானம் நிலையம் ஒன்றில் திருட்டுத்தனமாக புகுந்து விமானத்தை கடத்தி சென்று இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் உட்டா நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக ஹாலிவுட் படங்களில் விமான நிலையத்திற்குள் புகுந்து விமானத்தை திருடும் சம்பவங்கள் நிறைய நடக்கும்.
இதைப்பார்த்து நிஜத்திலும் சிலர் அதை முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் இதுவரை இந்த விமான திருட்டுகள் எல்லாம் பெரிய அளவில் வெற்றிபெற்றது இல்லை.

எப்படி திருடினார்கள்
இந்த நிலையில் உட்டா பகுதியின் ஜென்சன் என்று இடத்தில் உள்ள தனியார் விமான நிலையத்திற்கு இரண்டு சிறுவர்கள் வந்துள்ளனர். இரண்டு பேரும் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது, 14 வயது நிரம்பிய பள்ளி சிறுவர்கள். அந்த விமான நிலையத்திற்கு இவர்கள் டிராக்டர் மூலம் வந்துள்ளனர்.

தாழ்வாக பறந்தனர்
அதிகாலை 4 மணிக்கு வந்த இவர்கள் இருவரும், டிராக்டரை ஓரமாக நிறுத்திவிட்டு, பின் விமான நிலையத்திற்குள் எகிறி குதித்துள்ளனர். அதோடு இல்லாமல் அங்கிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை எடுத்து இயக்கி உள்ளனர். எதை பார்த்துக் கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை, மிகச்சரியாக விமானத்தை இயக்கி பறந்துள்ளனர்.

தரையிறக்கினார்
5 மணிக்கு பறக்க தொடங்கிய இவர்கள் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் தாழ்வாக பறந்து உள்ளனர். பின் அங்கிருந்து அருகே இருந்த வெர்னல் ரிஜினல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். பின் அந்த விமான நிலையத்தில் மிக கட்சிதமாக தரையிறக்கினார்கள்.

விசாரணை
இந்த சம்பவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறுவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் எப்படி இந்த செயலை செய்தார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications