விஸ்வரூபம் எடுக்கும் மோதல்.. மொத்த டீமையும் இறக்கும் பிடன்.. மோதிப்பார்க்க ரெடி.. அதிரடி அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கோர்ட்டுக்கு சென்றால் செல்லட்டும்.. நாங்களும் எங்களின் சட்ட குழுவுடன் தயாராக இருக்கிறோம், என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இதனால் அதிபர் தேர்தலில் முடிவு வந்த பின்பும் பெரிய சட்ட மோதல் நடக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை 238 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று.. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் தான் வென்றுவிட்டதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்துவிட்டார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும், நான் ஏற்கனவே வென்றுவிட்டேன் என்று டிரம்ப் அறிவித்துளார்.

கோர்ட்

கோர்ட்

தேர்தலில் ஜனநாயக கட்சி முறைகேடு செய்ய பார்க்கிறது. இதற்கு எதிராக கோர்ட்டுக்கு செல்வேன் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். தபால் வாக்கு எண்ணிக்கையை தடுக்கும் விதமாக டிரம்ப் இப்படி பேசி உள்ளார். இந்த நிலையில் தற்போது பிடன் சார்பாக இதற்கு எதிர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், டிரம்ப் பேச்சு திமிர்த்தனமானது, யாருமே எதிர்பார்க்காத ஒன்று.

அறிக்கை

அறிக்கை

அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமையை வெளிப்படையாக பறிக்க வேண்டும் என்று டிரம்ப் முயல்கிறார். ஒரு தேசிய தேர்தலில் அமெரிக்க மக்களின் வாக்குரிமையை பறிக்க அமெரிக்க அதிபர் முயல்கிறார். தேசிய அளவில் முதல் முறை இப்படி நடக்கிறது. பல மாகாணங்களில் வாக்கெடுப்பை தடுப்பதற்கு குடியரசு கட்சித் தீவிரமாக முயன்று வந்தது.

தடுக்க முயன்றது

தடுக்க முயன்றது

தேர்தலுக்கு முதல்நாள் கூட எப்படியாவது தபால் வாக்குகளை நிறுத்த குடியரசு கட்சி முயன்றது. இந்த நிலையில் தற்போது பதிவான வாக்குகளை கூட எண்ணக்கூடாது என்று டிரம்ப் கூறுகிறார். இதுவரைய பதிவான எல்லா வாக்குகளையும் எண்ண வேண்டும். அதுதான் விதி. இதுதான் அமெரிக்க சாசனம் சொல்லும் விதி.

விதி என்ன

விதி என்ன

இதுதான் அமெரிக்க சாசனம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உரிமை. நாங்கள் எங்கள் சட்ட அணியுடன் தயாராக இருக்கிறோம். டிரம்ப் கோர்டுக்கு சென்றால், நாங்களும் செல்வோம். நாங்களும் எங்களை சட்ட குழுவை அனுப்ப தயாராக இருக்கிறோம். தேர்தல் முடிவை, வெற்றியாளரை டிரம்ப் தீர்மானிக்க முடியாது.

யார் வெற்றி

யார் வெற்றி

பிடன் தீர்மானிக்க முடியாது. வெற்றியாளரை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அதற்கு முழுமையாக வாக்குகளை எண்ண வேண்டும், என்று பிடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சட்ட ரீதியான மோதலுக்கு பிடன் தரப்பு தயாராகி உள்ளது. ஆகவே விரைவில் இரண்டு தரப்பிற்கும் இடையில் சட்ட ரீதியான மோதல் நடக்கலாம், அதிபர் யார் என்பதில் மாறுப்பட்ட கருத்து ஏற்படலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+