அமெரிக்க தேர்தல் ரிசல்ட்.. பிரதிநிதிகள் சபை முடிவுகளில் இழுபறி! போராடும் டிரம்ப்!
நியூயார்க்: அமெரிக்க தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் புதிய அதிபராக தேர்வாகியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் (ஹவுஸ்) முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. தற்போதைய நிலவரப்படி டிரம்ப் இன்னும் பெரும்பான்மை இல்லாமல் தவித்து வருகிறார்.
அமெரிக்க தேர்தல்கள் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. பல போர்கள் கைவிடப்படவும், தொடரும் இந்த தேர்தல் முடிவுகள் காரணமாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவுற்றதையடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த தேர்தலில் கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் வாக்களித்தனர். விண்வெளியிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 அமெரிக்க விண்வெளி வீரர்களும் கூட வாக்களித்தனர்.

இதனையடுத்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் செனட் சபையில் பெரும்பான்மை இடங்களை பெற்று குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருந்தார். அதேபோல எலக்டோரல் வாக்குகளையும் டிரம்ப் அதிகமாக பெற்றிருந்தார். அதிபராக 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டும். அந்த வகையில் டிரம்ப் 292 வாக்குகளை பெற்று புதிய அதிபராகியுள்ளார். இவர் வரும் ஜனவரி மாதம் பதவியேற்றுக்கொள்கிறார்.
மறுபுறம் ஜனநாயக கட்சியை பொறுத்தவரை, 6.71 கோடி மக்கள் வாக்குகளையும், 224 எலக்டோரல் வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளார். அதேநேரம் இன்னும் பிரதிநிதிகள் சபை (ஹவுஸ்) வாக்குகள் எண்ணி முடிக்கப்படாமல் இருக்கிறது. 218 இடங்களை பெற்றால் பெரும்பான்மை. தற்போது வரை டிரம்ப் 205 இடங்களையும், கமலா 190 இடங்களையும் வென்றிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முடிவுகள் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "டிரம்பின் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுவாக்கியுள்ளது" எனக்கூறியுள்ளார். இதன் மூலம் லெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீதான் இஸ்ரேலின் தாக்குதலுக்கு, அமெரிக்கா நிச்சயம் கைகொடுக்கும் என சிம்பாலிக்கா தெரிவித்திருக்கிறார்.
இந்த தேர்தல் வெற்றி மூலம், டிரம்ப் சரிவிலிருந்து மீண்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு டிரம்பின் அதிபர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் டிரம்ப் தோல்வியுற்றார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு டிரம்ப்தான் பொறுப்பு என்று அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அதேபோல, வேறு இரண்டு வழக்குகளிலும் டிரம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். போதாத குறைக்கு அவர் சார்ந்து இருக்கும் குடியரசு கட்சியே அவரை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டிருந்தது.
ஆனால் அதையெல்லாம் முறியடித்து தற்போது இரண்டாவது முறையாக அதிபராக தேர்வாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications