இந்தியாவை சீண்டி.. டிரம்ப் வசமாக மாட்டிகிட்டாரு பாருங்க.. மோசமாக சரியும் டாலர் சாம்ராஜ்ஜியம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க டாலரின் மதிப்பு ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது. அமெரிக்க சந்தை எதிர்பார்த்ததை விட மோசமான நிலையில் இருப்பதற்கான புதிய தரவுகள் வெளியானதை அடுத்து, ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

டாலர் குறியீடு ஜூலை 24-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு ஆசிய வர்த்தகத்தில் 97.344 ஆக குறைந்தது. ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான அமெரிக்க சந்தை தரவுகளின் திருத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் வெளியாவதற்கு முன்னதாக இந்த சரிவு ஏற்பட்டது. பொருளாதார வல்லுநர்கள் இந்த சரிவு காரணமாக 800,000 வேலைவாய்ப்புகள் வரை குறையக்கூடும் என்று கணிக்கின்றனர்

Donald Trump India

இந்தியா டிரம்ப் மோதல்

இந்தியாவிற்கு எதிராக டிரம்ப் விதித்துள்ள வரிகளுக்கு இடையே இந்த சரிவை அமெரிக்கா சந்தித்துள்ளது. ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசனது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.

முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்தியக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மீது 50% வரி விதித்ததன் மூலம் அமெரிக்க-இந்தியா உறவுகளை டிரம்ப் பாதித்துவிட்டதாகவும், இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தள்ளியுள்ளதாகவும் போல்டன் கூறியுள்ளார்.

முக்கியமாக எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் - ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். இவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. இவர்கள் ஒன்றாக உள்ள புகைப்படம் அமெரிக்க அரசியலை உலுக்கி உள்ளது. உலக அரசியலின் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை உலுக்கிய மோடி போட்டோ

எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்ட முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், "வெள்ளை மாளிகை அமெரிக்க-இந்தியா உறவுகளை பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டது. மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தூண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் டொனால்ட் டிரம்ப்பிற்கு மாற்றாக பெய்ஜிங் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் விதித்த வரிகள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நாடுகள் இவ்வளவு காலம் மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளை தகர்த்துவிட்டதாக போல்டன் சாடினார். சோவியத் யூனியனுடனான (ரஷ்யா) இந்தியாவின் பனிப்போர் கால உறவை முடிவுக்குக் கொண்டுவரவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைச் சமாளிக்கவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சித்தன.. ஆனால் அதை எல்லாம் டிரம்ப் இப்பொது நாசம் செய்துவிட்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் ராஜதந்திர ரீதியாக இத்தனை காலம் அமெரிக்கா அடைந்த சாதனைகளை பலவீனப்படுத்திவிட்டதாக போல்டன் கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு ரீதியான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது புதிய வேர்ல்டு ஆர்டருக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் அடைந்த காரணத்தால், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவில் இறுக்கம் தளர்ந்தது என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+