திருமணமாகி 1 வருடத்தில்.. கோல்ப் ஆட போன இடத்தில்.. ஆபாச நடிகையுடன் உறவு.. டிரம்ப் சிக்கியது எப்படி?
நியூயார்க்: ஆபாச நடிகையுடன் உறவு வைத்து இருந்த நிலையில்.. அவருக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட உள்ளார். வாழ்நாள் முழுக்க மத ரீதியாகவும், நிற ரீதியாகவும் பேசி அரசியல் செய்த ஒருவர் தனது " ஆசையால்" தற்போது ஜெயிலுக்கு செல்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 2006-ம் ஆண்டு மெலீனா டிரம்ப் உடன் திருமணம் நடந்தது. இது டிரம்பின் மூன்றாவது திருமணம்.
ஏற்கனவே பல பெண்களுடன் பழக்கம் கொண்ட டிரம்ப்.. மெலீனாவை திருமணம் செய்தும் சும்மா இருக்காமல்.. செய்த ஒரு காரியம்தான் அவரை தற்போது சிறைக்கு தள்ள உள்ளது.

கோல்ப்
டிரம்பிற்கு பிடித்தமான 4 விஷயங்கள்.. 1 பணம்.. 2 நிறவெறி.. 3 பெண்கள்.. இதில் 4வது விஷயம்தான் கோல்ப். இந்த 4 விஷயங்கள்தான் அவரின் அரசியல் வாழ்க்கையை சிதைத்து போட்டு இருக்கிறது. கோல்ப் ஆட்டத்தில் விருப்பமான டிரம்ப்.. அமெரிக்காவில் பெரிய கறுப்பின போராட்டங்கள் நடந்த போது கூட.. ஜார்ஜ் பிளாய்டு போராட்டம் நடத்த போது கூட அதிபராக எதுவும் செய்யாமல் கோல்ப் ஆடிய சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. அந்த கோல்ப்தான் தற்போது டிரம்ப் வாழ்க்கையில் புட்பால் ஆடி இருக்கிறது. 2006ல் கோல்ப் போட்டி ஒன்றிற்கு இயல்பாக அன்று ஆட சென்ற போது அங்கே ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற பெண்ணை பார்த்து இருக்கிறார். அந்த பெண் ஒரு ஆபாச நடிகை.

பெண்
அப்போது டிரம்பிற்கு 60 வயது. மெலீனாவிற்கு 27 வயசு. அந்த பெண்ணை பார்த்ததும் பின்னணியில் இளமை திரும்புதே பாடல் கேட்க.. டிரம்ப் "காமத்தில்" வீழ்ந்து இருக்கிறார். அப்போதுதான் அவரின் மூன்றாவது மனைவி மெலீனா கர்ப்பம் ஆகி குழந்தையும் பெற்று இருந்தார். இப்படிப்பட்ட நேரத்தில் கோல்ப் ஆட சென்ற இடத்தில் டிரம்பிற்கு காதலும், காமமும் அரும்பி இருக்கிறது. ஆனால் அப்போது அவருக்கு தெரியாது.. அந்த காமம் 2016லும், 2023லும் தனக்கு பெரிய ஆப்பு வைக்க போகிறது என்று. அந்த பெண்ணுடன் அப்போது நெருக்கமாக பழகி டிரம்ப் தனது இன்னொரு வீட்டிற்கு கொண்டு சென்று பாலியல் உறவும் வைத்து இருக்கிறார்.

பாதுகாவலர்
டிரம்பின் பாதுகாவலர் ஸ்டோர்மி டேனியல்ஸை அழைத்து சென்று காரில் ஒரு உணவகம் கூட்டி சென்று அங்கே டிரம்ப் உடன் சந்திப்பு நடக்க வைத்துள்ளார். இவர்கள் டின்னர் சாப்பிட்டுவிட்டு பின்னர் இவர்கள் பாலியல் உறவு கொண்டு உள்ளனர். இந்த டின்னருக்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. இங்கே ஸ்டோர்மி டேனியல்ஸ் பற்றி சொல்லி ஆக வேண்டும். அவர் அமெரிக்காவில் கொஞ்சம் பிரபலமான பார்ன் நடிகை. அதாவது ஆபாச படங்களில் நடிக்க கூடியவர். பின்னாளில் புத்தகம் எழுதிய ஸ்டோர்மி டேனியல்ஸ்.. நான் மேற்கொண்ட செக்சில் மிக மிக மோசமானது.. எனக்கு உணர்வே கொடுக்காத போரிங் செக்ஸ் என்றால் அது டிரம்ப் உடன் மேற்கொண்டதுதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். டிரம்பிற்கு தன் மீது வைக்கப்பட்ட பாலியல் புகாரை விட இதுதான் அதிக வேதனை கொடுத்திருக்கும்.. டிரம்ப் மீது இதே புகாரை அவரின் முன்னாள் மனைவிகளும்வைத்தது வேறு கதை.

2016
இதன் பின் டிரம்ப் ஸ்டோர்மி டேனியல்ஸை சில காலம் சுற்றிவிட்டு அப்படியே மறந்துவிட்டார்.. ஆனால் ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்பை மறக்கவில்லை.. அவர் மீண்டும் 2016ல் வந்தார். இந்த முறை டிரம்ப் ஸ்டோர்மி டேனியல்ஸ் முகத்தை பார்த்ததும் சந்தோசம் அடையவில்லை.. இளமை திரும்புதே பாடலும் ஓடவில்லை.. மாறாக அச்சப்பட்டார். காரணம்.. 2016 அதிபர் தேர்தலுக்கு முன் இதை பற்றி ஊடகங்களில் சொல்ல போவதாக ஸ்டோமி டேனியல்ஸ் கூறி இருந்தார். மீடியாக்களில் பேட்டி அளிக்கவும் அவர் தயாராக இருந்தார். அதிபர் தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் வெளியே வந்தால் டிரம்ப் பிரைமரி தேர்தலிலேயே தோல்வி அடைவார். பெண்கள் வாக்குகள் கிடைக்காது. முக்கியமாக வெள்ளையின பெண்களே வாக்களிக்க மாட்டார்கள்.

டிவோர்ஸ்
அவரின் மூன்றாவது திருமணமும் முறியும் வாய்ப்பு ஏற்படும். அதிபர் கனவு காலி.. அமெரிக்காவை மீண்டும் "கிரேட்டாக" மாற்றும் கனவும்., சுவர் எழுப்பும் கனவும் காலி. இதையடுத்து ஸ்டோர்மி டேனியல்ஸை சரி கட்ட வேண்டும் என்று, அவருக்கு 130000 டாலர் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது பணத்தை கொடுத்து அவரின் பேட்டி வெளியே வராமல் தடுத்து உள்ளனர். இதுவரை நடந்த எதுவும் தவறு கிடையாது. மெலினா டிரம்ப் தனது கணவர் மீது புகார் கொடுக்காத வரை இது எதுவுமே தவறு கிடையாது. அந்த பெண்ணுடன் அவர் கொண்ட உறவும், முழு சம்மதத்தோடு நடந்த consensual உறவுதான். ஆனால் இங்கே டிரம்ப் செய்த தவறு என்பது.. அந்த 130000 டாலருக்கு அவர் கணக்கு காட்டியதுதான்.

தவறான கணக்கு
அந்த தொகையை தனது லாயருக்கான பீஸ் என்று இவர் கணக்கு காட்டி இருக்கிறார். இது நியூயார்க் சட்டப்படி குற்றம் ஆகும். இங்குதான் டிரம்ப் மாட்டிக்கொண்டு உள்ளார். அதோடு தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் வெளியே தெரிய கூடாது என்று அந்த பெண்ணுக்கு காசு கொடுத்து இவர் வாக்காளர்களை ஏமாற்றி உள்ளார். இது இரண்டும்தான் இப்போது அவர் மீது வைக்கப்படும் கிரிமினல் குற்றச்சாட்டு. ஒரு குற்றத்தை மறைக்க வங்கி கணக்கு வழக்குகளை தவறாக காட்டுவது என்பது ஒரு பெலோனி கிரைம். இதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இந்த வழக்கில் ஜூரி குழு தற்போது டிரம்ப் குற்றம் செய்வதராக நம்புவதாக குறிப்பிட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை நடக்கும் வரை டிரம்ப் ஜெயிலில் இருக்க வேண்டும். அவருக்கு பெயில் கிடைக்காது. இந்த குற்றத்திற்கு பெயில் கிடையாது. ஆனால் டிரம்ப் முன்னாள் அதிபர் என்பதால் சில விதி விலக்கு கொடுக்கப்படும். டிரம்ப் கையில் விலங்கு போட்டு அவரை கைது செய்வார்கள். இதற்காக அவருடைய வக்கீலிடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ப்ளோரிடாவில் இருந்து அவர் நியூயார்க் கொண்டு வரப்பட்டு பின்னர் கைது செய்யபபடலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications