மாட்டின் வயிற்றில் துளை போட்டு.. டியூப் மாட்டி.. 2 நாடுகளை ஆக்கிரமித்த வினோத வழக்கம்! ப்பா என்ன இது?

மாடுகளை வருமானத்திற்காக நம்பி இருப்பவர்கள் பலர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மாட்டின் வயிற்றில் துளை போட்டு அதில் திறப்பு போல அமைப்பை ஏற்படுத்தும் பழக்கம் அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் திடீரென ஏற்பட்டு உள்ளது. இந்த புதிய பழக்கத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

வீட்டில் மாடுகளை வளர்ப்பவர்களுக்கு தெரியும்.. அது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. முக்கியமாக மாடுகளுக்கு அடிக்கடி வயிற்று பிரச்சனை ஏற்படும்.

அதிலும் செரிமான பிரச்சனை தொடங்கி சாணி போடுவது வரை அடிக்கடி பிரச்சனை ஏற்படும். இதற்காக மாடுகளுக்கு அடிக்கடி சிகிச்சை கொடுக்கப்படும். சில மாடுகளுக்கு வயிற்றில் ஆபரேஷன் கூட செய்யப்படும்.

மாடுகள்

மாடுகள்

மாடுகளை வருமானத்திற்காக நம்பி இருப்பவர்கள் பலர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் மாட்டின் வயிற்றில் துளை போட்டு அதில் திறப்பு போல அமைப்பை ஏற்படுத்தும் பழக்கம் அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் திடீரென ஏற்பட்டு உள்ளது. இந்த புதிய பழக்கத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. மாட்டின் வயிற்று பகுதியில் பெரிய துளை போடுவார்கள். அதில் திறப்பு போன்ற அமைப்பை ஏற்படுத்துவார்கள். படத்தில் காட்டப்படுவது போல அந்த திறப்பு அமைக்கப்பட்டு இருக்கும்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

இதை எப்போதும் திறந்து வைத்து இருக்க மாட்டார்கள். தேவை இல்லாத நேரங்களில் இதை மூடி போட்டு மூடி விடுவார்கள். இதை fistula என்று அழைக்கின்றனர். இந்த துளை வழியாக மாட்டின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் எளிதாக தீர்க்க முடியும். அதாவது மாடுகளுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் அதை தீர்க்க முடியும். வயிற்றில் ஏதாவது மாட்டிக்கொண்டால் அதை சரி செய்ய முடியும். உள்ளே ஏதாவது பொருட்கள் செரிக்காமல் இருந்தால் அதை தூக்கி வெளியே போட முடியும் என்கிறார்கள். இதனால் மாட்டை எளிதாக பரிமாரிக்க முடியும்.

எப்படி செய்வார்கள்

எப்படி செய்வார்கள்

ஒரு மாட்டின் வயிற்றில் பிரச்சனை என்றால் அதன் பின் பக்கம் வழியாக இதில் கையை விட மாட்டார்கள். அல்லது ஆப்ரேஷன் செய்ய மாட்டார்கள். மாறாக மாட்டின் மீது போடப்பட்டு உள்ள இந்த துளை வழியாகவே கையைவிட்டு சோதனை செய்வார்கள். கையை உள்ளே விட்டு வயிற்று பகுதிக்குள் சோதனை மேற்கொள்வார்கள்.கிளவுஸ் மாட்டிக்கொண்டு இப்படி எளிதாக கையை விட்டு சோதனை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மாட்டிற்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் சரி செய்ய முடியும் என்கிறார்கள். இந்த பழக்கம் தற்போது அமெரிக்கா, நியூசிலாந்தில் அதிகம் உள்ளது. முக்கியமாக பெரிய பண்ணைகளில் அதிகம் உள்ளது. சாதாரணமாக வீடுகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் இதை மேற்கொள்ளவில்லை. பண்ணைகளில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்வதற்காக மாடுகளை வளர்க்கும் மக்கள் இப்படி செய்கின்றனர்.

வேதனை

வேதனை

இந்த மாடுகளுக்கு இதனால் கடுமையான வலி தொடக்கத்தில் ஏற்படும். அதாவது துளை போட்ட இரண்டு மாதங்களுக்கு அதற்கு கடும் வலி இருக்கும். அதன்பின் இந்த வலி சரியாகிவிடும். இந்த துளை வழியாக பூச்சுகள் செல்லாமல் இருக்க அதில் மூடி இருக்கும். அதோடு துளை போட்ட பகுதிகளில் மாடுகள் படுக்க முடியாது என்பதால் தொடக்கத்தில் அந்த மாடுகளுக்கு பெரிய அளவில் அசௌகரியம் இருக்கும். மாடுகளுக்கு வயிற்றில் இருக்கும் கெமிக்கலை ஆய்வு செய்யவும் இந்த துளை பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+