இந்த ஒரு படம் உலக அரசியலை உலுக்க போகுது.. டிரம்ப்தான் இனி அமெரிக்க அதிபர்.. இந்த போட்டோவை பாருங்க!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சுடப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவர் சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தில் பெற்றுள்ளது.
அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். தற்போது நடத்தப்பட்டு உள்ள துப்பாக்கி சூடு அவரை கிட்டத்தட்ட அதிபர் ஆவதை உறுதி செய்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு அவருக்கான ஆதரவை அதிகரிக்கலாம். அதிபர் தேர்தலில் விவாதங்கள், மக்கள் கருத்து கணிப்புகள் எல்லாம் நடக்கும். அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒரு கட்டமாக அதிபர் பிடன், முன்னாள் அதிபர் ட்ரம்ப் இடையே சமீபத்தில் விவாதம் நடந்தது.

இதில் பிடன் மிக மோசமாக சொதப்பி உள்ளார். அவர் சொதப்பியதை பார்த்து அவரின் சொந்த ஜனநாயக கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலக சொல்லி உள்ளனர். ஜோ பிடன் செய்ய வேண்டியதெல்லாம், அவரது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை முறையாக நிகழ்த்துவதுதான். பெரிதாக வாதம் எல்லாம் செய்திருக்க வேண்டியது இல்லை.
மாறாக, அவர் தனது பேச்சு முழுக்க தடுமாறினார். திக்கி திணறினார். மேலும், தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கும் குறைவான நேரத்தில், அவர் மேடையிலேயே பொம்மை போல நின்றது, பதறியது, பேச்சுக்கு இடையே இடையே அப்படியே அசையாமல் நின்றது என்று அதிர்ச்சி அளித்தார். பேச்சை விடுங்கள்.. அவருக்கு சுயநினைவு இருக்கிறதா என்ற கேள்வியை கூட இன்று நடந்த விவாதம் ஏற்படுத்தி உள்ளது.
மில்லியன் என்று சொல்ல வேண்டிய இடத்தில் பில்லியன், சாதாரண ஆங்கில வார்த்தைகளில் கூட தவறு, பல விஷயங்களில் அடிப்படையை கூட சொல்ல முடியாமல் திணறல் என்று பிடன் அதிர்ச்சி அளித்துள்ளார். இதனால் அவருக்கு நிதி கொடுத்தவர்களே போட்டியில் இருந்து விலகுங்கள் என்று பிடனிடம் சொல்ல தொடங்கி உள்ளார்களாம்.
முன்னாள் மேரிலாந்து கவர்னர் மார்ட்டின் ஓ'மல்லியின் பிடன் கட்சிதான். ஆனால் அவரே பிடனை விலக சொல்லி உள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிடன் பிரச்சாரத்திற்கு இணைத் தலைவராக இருந்த நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஜனநாயக ஆர்வலருமான ஜே சுர்டுகோவ்ஸ்கி, "பிடனை ட்ரம்ப் வறுத்து எடுத்துவிட்டார்- அவர் விலக வேண்டும்" என்று விமர்சனம் வைத்துள்ளார்.
இவரை தவிர கட்சியின் பலர் இதே விமர்சனங்களை வைத்துள்ளனர். பிடனின் பேச்சின் முதல் நிமிடங்களைப் பார்த்த ஜனநாயகக் கட்சியினர் பெரும் குழப்பத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி உள்ளனர். இதுவரை முதல்கட்ட விவாதத்தில் பிடன் படுதோல்வி அடைந்துள்ளார். ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.
டிரம்ப் போட்டோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுடப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவர் சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தில் பெற்றுள்ளது. காதில் ரத்தம் வடிய அவர் முகம் சாய்த்து படுத்துக்கிடந்த புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.
டிரம்ப் காயமடைந்த நிலையில் சந்தேகத்திற்குரிய 2 பேர் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரச்சாரம் செய்யும் போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர் பிடன் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
டிரம்ப்பை சுட்டதாக நம்பப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு பின் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டினார். அவரின் காதுகளில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
அந்த ரத்த காயத்தோடு டிரம்ப் மக்கள் முன்னிலையில் ஜே போடுவது போல துணிச்சலாக சவால் விடுவது போல கைகளை உயர்த்தி காட்டியது கவனம் பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளார்.
சிறிய ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. டிரம்ப் காதுகளில் மட்டும் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. மற்றபடி அவருக்கு வேறு பாதிப்புகள் இல்லை.












Click it and Unblock the Notifications