நீலகிரி மாவட்டத்தில் Fast Tag முறை, தானியங்கி செக் போஸ்ட் அமல்படுத்தப்படும்! ஆட்சியர் பவ்யா பேட்டி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படவுள்ளது என ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். அதாவது இபாஸை கண்காணித்து தானாக வசூல் செய்யும் வகையில் பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் வெளிமாவட்ட , வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த இபாஸ் எனும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இந்த கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வழக்கம் போல் ஊட்டி, கொடைக்கானலுக்கு வாகனங்களில் சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர்.

ooty fast tag collector

இந்த நிலையில் கோடை காலத்தில் ஊட்டிக்கு தினமும் 20 ஆயிரம் வாகனங்கள் வருகை தருவதால் உள்ளூர் மக்கள் நடமாட முடியாது என்பதால் கடந்த மே 7ஆம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த இபாஸ் நடைமுறையில் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல முடியும் என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐ ஐ எம் நிறுவனங்களை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களுக்கும் வருகை தந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டி காட்டினார்.

மேலும் இரு மாவட்ட ஆட்சியர்களும் அளித்த அறிக்கையில் கூறியுள்ள புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அது தவறான முடிவுக்கு வழி வகுத்து விடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பதிலளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தன்னிச்சையாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பொருத்த இருப்பதால் இனிமேல் முழுமையான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இ பாஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இபாஸ் பெற்ற பிறகு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் இபாஸுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தில் உரிமம் பெற்ற ரிசார்ட்கள் ஹோட்டல்கள் குறித்த விபரங்களை சேர்க்க முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது ஊட்டி, கொடைக்கானலில் அதிகம் பேர் இபாஸ் பெற்றுக் கொண்டு வருகை தருவதால் செக் போஸ்ட்களில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்தன. ஒவ்வொரு வாகனங்களாக மாவட்ட நிர்வாகத்தினர் சரி பார்த்து உள்ளே அனுப்பும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் பவ்யா செய்தியாளர்கள் சந்தித்த போது கூறியிருப்பதாவது: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படவுள்ளது. கியூ ஆர் கோடு மூலம் தானாக திறக்கும் தானியங்கி செக் போஸ்ட் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகளின் தங்கும் இடம் உள்ளிட்டவை குறித்து இ பாஸ் மையத்திற்கு தெரிவிக்கப்படும். முக்கிய சோதனை சாவடிகளில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இபாஸ் எடுப்பது எப்படி: நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு http://www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள் வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+