மசினகுடியில் இரும்பு "வளையத்துக்குள்" போன ரேஷன் கடைகள்.. ஹப்பாடா.. நீலகிரியில் இப்ப தான் நிம்மதி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினகுடி ரேஷன் கடையில் என்ன நடந்தது தெரியுமா? வனப்பகுதி கிராம மக்களுக்காக வெளியிடப்பட்டிருக்கும் தகவலானது, தற்போது கலக்கத்தை போக்கி, நிம்மதியை தருகிறது.. என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை யானைகள், புலிகள் பிரதான உயிரியல் ஆதாரமாக அமைந்துள்ளன... அதனால்தான், மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, யானைகள், புலிகள் பாதுகாப்புக்காக, பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழக வனப்பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றன... இந்த விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வன விலங்குகள்: குறிப்பாக, வன விலங்குகளின் நடமாட்டம், இனப்பெருக்கம் அடிப்படையில், வனப்பகுதிகளில் சூழலியல் தன்மை கணக்கிடப்படுகிறது.. அந்தவகையில், யானைகள், புலிகள் எண்ணிக்கை உயர்ந்து காணப்பட்டாலும், அவைகளின் இறப்புகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக இருக்கிறதாம்.
அதாவது, கடந்த 8 மாதங்களில், நீலகிரி மாவட்டம் முதுமலையில், 16 யானைகள், கோவை மாவட்டத்தில், 14 யானைகள், ஈரோடு சத்தியமங்கலத்தில் 9 யானைகள் உட்பட, 47 யானைகள் இறந்துள்ளன.. கடந்த வருடம் நீலகிரியில் மட்டும் 10 புலிகள் இறந்துள்ளன.. அதிலும், இந்த வருடம் வெறும் 8 மாதங்களில், 5 புலிகள் இறந்துள்ளன.. ஒன்று நெல்லையிலும், 4 புலிகள் நீலகிரியிலும் இறந்துள்ளன.. கடந்த வாரம்கூட, நீலகிரி கூடலுார் பகுதியில், 2 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன..
பொருட்சேதங்கள்: இப்படி விலங்குகள் உயிரிழப்பது கவலையை தந்துவந்தாலும், இன்னொருபக்கம், குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டிதான் அமைந்துள்ளன.. இந்த கிராமங்களில் யானைகள் புகுந்து ரேஷன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்திவிடுகின்றன.. இதனால், ரேஷன் ஊழியர்களின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது.. அதுமட்டுமல்லாமல், உணவு பொருட்கள் சேதம் அடைவதால் அதற்கான தொகையை ஊழியர்கள் ஈடு செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.
ரேஷன் கடைகள்: இதன்காரணமாக, நீலகிரி, வால்பாறை, கோவை உள்ளிட்ட வனப்பகுதிகளையொட்டி உள்ள ரேஷன் கடைகள் என்றாலே, அங்கு வேலை பார்ப்பதற்கு ஊழியர்கள் தயக்கம் காட்டி விடுகிறார்களாம்..
அதிலும், மசினகுடி ரேஷன் கடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் நீலகிரியில் அடங்கவில்லை.. மசினகுடியிலிருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு சில வாரங்களுக்கு முன்பு, காட்டு யானை புகுந்துவிட்டது..
நள்ளிரவில் கடைக்குள் புகுந்த யானை, ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை தூக்கி வெளியே வீசியுள்ளது.. கடையின் கதவுகளையும் அடித்து நொறுக்கி உள்ளது.. ரேஷன் கடையிலிருந்த பல்வேறு பொருட்களையும் சேதமாக்கியிருக்கிறது. எனவே, இந்த ரேஷன் கடையை உடனடியாக சீரமைக்க முடியாமல், பக்கத்திலிருந்த இன்னொரு கட்டிடத்தில் வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன...
மீண்டும் சேதம்: இதற்கு பிறகு, ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்பட்டது. ஆனால், மறுபடியும் அதே காட்டு யானை, அதே ரேஷன் கடைக்கு வந்து, ஷட்டரை அடித்து நொறுக்கிவிட்டது.
இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் அறிவுரைப்படி, மசினகுடி ரேசன் கடைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.. அத்துடன், ரேஷன் கடையை சுற்றிலும் சூரிய மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது..
நிம்மதி தகவல்: இது தொடர்பாக கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் சொல்லும்போது, "மசினகுடி ரேஷன் கடையில் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. கம்பி வலை, இரும்பு கேட், இரும்பு ஷட்டர் என்று மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், ரேசன் கடைகளை யானைகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும் என நம்புகிறோம். வனப்பகுதியையொட்டி உள்ள எல்லா ரேஷன் கடைகளையும் பாதுகாக்க, இதே நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்" என்றார். இதனால், வனப்பகுதி கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications