ஒரு மணிநேரமாக சுயநினைவிழந்த டிரைவர்.. நெஞ்சில் அடித்து உயிர் கொடுத்த நீலகிரி இன்ஸ்பெக்டர்- வீடியோ
நீலகிரி : நீலகிரியில் இருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் விபத்துக்குள்ளான ஒரு மணி நேரமாக சுயநினைவை இழந்த ஓட்டுநருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை செய்து மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் அபிலாஷ். இவர் நேற்று முன் தினம் மாலை ஊட்டியிலிருந்து கேரட் உள்ளிட்ட காய்கறிகளை மலையிலிருந்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தார்.
அப்போது கீழ்நாடுகாணி வழியாக கேரளா மாநிலம் வயநாடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.

காய்கறி
அப்போது தமிழக எல்லைப் பகுதியான கீழ்நாடுகாணி அருகே காய்கறி ஏற்றிச் சென்ற வாகனம் சென்ற போது எதிர்பாராவிதமாக வாகனம் விபத்துக்குள்ளாகி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வாகன ஓட்டுநர் அபிலாஷ், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

ஒரு மணி நேரம்
இதனால் மூச்சு பேச்சில்லாமல் ஒரு மணி நேரமாக சாலையில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சுயநினைவை இழந்த நிலையில் மயங்கிய நிலையில் அபிலாஷ் இருந்தார். இதை பார்த்த காவல் துறை ஆய்வாளர் சத்தியமூர்த்தியும் அப்பகுதி வாகன ஓட்டுநர் மரக்காணமும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சுயநினைவை இழந்த அபிலாஷ்
அப்போது சுயநினைவை இழந்து கிடந்த அபிலாஷை சத்தியமூர்த்தியும் மரக்காணமும் நன்கு மார்பு பகுதியில் அழுத்தம் கொடுத்தனர். அதாவது சிபிஆர் முறைப்படி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அபிலாஷுக்கு சுயநினைவு வந்தது.

வைரல்
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறந்ததாக கருதப்பட்ட ஓட்டுநரை உயிர் பிழைக்க வைத்த காவல் ஆய்வாளர் சத்திய மூர்த்திக்கும் வாகன ஓட்டுநர் மரக்காணத்திற்கும் பாராட்டுகள் குவிகின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications