மலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலில் அமைச்சருக்கு தண்ணீர்.. குன்னூரில் சர்ச்சை
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலில் அமைச்சர் துரைமுருகனுக்கு தண்ணீர் விநியோகம் செய்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், திமுகவினருக்கு சொந்த மாவட்ட செயலாளர்களையே தெரியாது. அவர்களிடம் கேட்டால் அந்த மாவட்டச் செயலாளரிடம் பேசி 3 ஆண்டுகள் ஆகிறது என சொல்கிறார்கள். ஆனால் அதிமுகவினருடன் நல்ல பழக்கம் இருக்கு என்கிறார்கள்.

மாற்றான் கட்சி
மாற்றான் கட்சியினரை பார்த்தால் அன்பு கரந்து வர வேண்டும். எதிரியை கண்டால் கொதித்து நிற்க வேண்டும் அதான் திமுக. உலகத்திலேயே ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு எவருக்கும் கிடையாது. ஆனால் ஒரு கட்சியில் ஐம்பது ஆண்டுகாலம் தலைவராக இருந்தவர் திமுக மறைந்த தலைவர் கலைஞர் மட்டும் தான், அப்படிபட்ட மகத்தான ஜாம்பவானாக திகழ்ந்த கலைஞர் மிசாவில் இருந்து இக்காட்சியை காப்பாற்றியதுடன், பதிமூன்று ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். இன்னொரு முறை தமிழ்நாட்டில் திமுக போன்ற ஒரு கட்சி உருவாக முடியாது.

தமிழகம்
வரும் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டு ஆளுமையில் திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே இருக்கும். மற்ற கட்சிகள் தமிழ்நாட்டில் பெயரளவில் மட்டுமே செயல்படும். இத்தகைய வரலாற்று மிக்க திமுகவை பாதுகாக்க வேண்டும் என்றால் இக்கட்சியின் கொள்கைகள் அழியாமல் பாதுகாத்திட வேண்டும். ஆகையால் இளம் சமுதாயம் மத்தியில் திமுகவின் வரலாற்றை கற்று கொடுக்க வேண்டும்.

ஆட்சி அமைத்தால்...
யார் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தாலும் இந்தியை திணிப்பது அதிக ஆர்வம் காட்டுவதாகவும், குறிப்பாக பாஜக அரசு இந்தியை திணிப்பதில் காட்டெருமை போன்று யாரையும் எதையும் பொருட்படுத்தாமல் அதன் போக்கில் செல்வது போல் பாஜக சென்று கொண்டிருப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டினார். இவர்களை வளரவிட்டால் பேராபத்து காத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சி சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த பாஜக இந்தி திணிப்பு குறித்து சொன்னாலும் கேட்பதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பிளாஸ்டிக் தடை
சுற்றுச்சூழல் மாசை தடுப்பதற்காகவும் பிளாஸ்டிக்குகளால் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுப்பதற்காகவும் குன்னூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட விழாவில் பிளாஸ்டிக் கேனில் அவருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
சட்டசபை தேர்தலில் வைகோ போட்டி? எந்த தொகுதி தெரியுமா? தீப்பிடிக்க போகும் தீப்பெட்டி! -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி!











Click it and Unblock the Notifications