தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் செய்த வலதுசாரி தலைவர்.. கொரோனாவால் உயிரிழந்தார்- யார் அவர்? முழு தகவல்
பாரீஸ்: கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை அலறவிட்டுக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா தற்போது உலகின் அனைத்து நாடுகளையும் மோசமாகத் தாக்கியுள்ளது.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பலவிதமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இருப்பினும், சில நாடுகள் மட்டுமே வைரசை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா தொடங்கிய ஆஸ்திரேலியா வரை கிட்டதட்ட அனைத்து நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் திணறுகின்றன.

உருமாறும் கொரோனா
அதிலும் இந்த கொரோனா வைரஸ் அலை அலையாக பரவுகிறது. அதாவது சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்துகின்றன. இப்போது உருமாறிய ஓமிக்ரான் கொரோனாவால் உலகெங்கும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா வேக்சின்
இருப்பினும், முந்தைய அலைகளைக் காட்டிலும் இந்த அலையில் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேக்சின். உலகில் எந்த நாட்டில் வேக்சின் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதோ அங்கு மருத்துவ உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைவாகவே உள்ளன. இருப்பினும், குறிப்பிட தகுந்த மக்கள் வேக்சின் மீது நம்பிக்கை இல்லாமல், தடுப்பூசி எடுக்கத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

ஜோஸ் எவ்ரார்டு
அப்படியொருவர் தான் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர் ஜோஸ் எவ்ரார்டு. இவர் அங்குள்ள தீவிர வலதுசாரி கட்சியான Debout la France என்ற கட்சியைச் சேர்ந்தவர். இவர் வடக்கு பிரான்சில் உள்ள Pas-de-Calais பகுதியில் இருந்து பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் பிரான்ஸ் நாட்டில் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக். மாதம் கூட தடுப்பூசி குறித்து ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் முன்மொழிந்திருந்தார்.

வேக்சினுக்கு எதிரான பிரசாரம்
கொரோனா தடுப்பூசிகளால் உயிரிழப்புகள் குறைவது தெரிந்தும் கூட, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 76 வயதான ஜோஸ் எவ்ரார்டும் தொடர்ந்து வேக்சினுக்கு எதிராக அவர் பிரசாரம் செய்து வந்தார். மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அவர் பிரசாரம் செய்து வந்தார்.

மறைவு
இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரான்ஸ் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க அனைவரும் வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ஜோஸ் எவ்ரார்டின் மறைவு நமக்கான எச்சரிக்கை மணி என்றும் அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications