அய்யய்யே.. செருப்பால் அடித்துக் கொண்டே.. கட்டிப்பிடித்து உருண்ட 2 பெண்கள்.. நடுவில் சிக்கிய இளைஞர்
500 ரூபாய் லஞ்சம் பெறுவதில் 2 சுகாதார ஊழியர்களிடையே தகராறு ஏற்பட்டது
பாட்னா: ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு, 2 பெண்கள் குடுமியை பிடித்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.. பிறகு செருப்பாலேயே ஒருவரையொருவர் அடித்து கொண்டனர்.. இதற்கெல்லாம் காரணம் வெறும் 500 ரூபாய்.. இத்தனைக்கும் இவர்கள் இருவருமே அரசு ஊழியர்கள் ஆவர்..!
Recommended Video
பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தின் லக்ஷ்மிபூர் தாலுகாவில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது..
இந்த சுகாதார மையத்தில் காசநோய் தடுப்பூசி செலுத்துவதற்காக, தன்னுடைய குழந்தையை தூக்கி கொண்டு ரிந்து குமாரி என்பவர் வந்திருந்தார்... இவர் ஒரு அங்கன்வாடி பெண் ஊழியர்..

ஊசி
தன்னுடைய குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அங்கிருந்த நர்ஸ் ரஞ்சனா குமாரியிடம் சொல்லவும், அவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்.. பிறகு, குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதற்காக 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் நர்ஸ் ரஞ்சனா கேட்டுள்ளார்.. அதற்கு ரிந்துகுமாரி மறுப்பு சொல்லி உள்ளார்.. இதுதான் தகராறாக உருவெடுத்துள்ளது..

சண்டை
சுகாதார மையத்தின் பிரசவ வார்டுக்கு பக்கத்திலேயே 2 பேருமே சண்டை போட ஆரம்பித்துவிட்டனர்.. இரு பெண்களுமே தலைமுடியை பிடித்து கொண்டு, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியும் கொண்டனர்.. பிறகு கீழே உருண்டு பிரண்டு மறுபடியும் சண்டை போட்டனர்.. அதற்கு பிறகு 2 பெண்களும் செருப்பால் அடித்துக் கொண்டனர்... அவரவர் செருப்பை எடுத்து, ஒருவரையொருவர் பலமாக தாக்கினர்..

சமாதானம்
இதையெல்லாம் சுற்றியிருந்தோர் வேடிக்கை பார்த்து கொண்டே நின்றார்களே தவிர, இரண்டு பெண்களையும் விலக்கிவிட யாரும் முன்வரவில்லை.. மாறாக, அங்கிருந்து ஆளுக்கு ஒரு பக்கம் ஓட தொடங்கினார்கள்.. ஒரே ஒரு ஆண் மட்டும், சண்டை போட்டு கொண்டிருந்த 2 பெண்களையும் சமாதானப்படுத்த வந்தார்.. ஆனால், 2 பெண்களுக்கு நடுவில் அவர் வந்து வசமாக சிக்கி கொண்டார்.. சந்தடி சாக்கில் அவருக்கும், 2 பெண்களிடமிருந்தும் தாறுமாறாக அடி விழுந்தது.. இந்த சம்பவத்தை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டனர்..

வீடியோ
சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதையடுத்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றது... ஆனால், இன்னும் 2 பெண்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.. துறை மீதான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும் என்று கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளன.. இதனிடையே, சம்பவம் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்..!












Click it and Unblock the Notifications