தேர்தல் முடிவுகள் என்ன வந்தாலும் சரி.. ஆதரவாளர்கள் அத்துமீற கூடாது.. தேஜஸ்வி யாதவ் அட்வைஸ்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் என்ன வந்தாலும் தனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றால் பட்டாசுகளை வெடிப்பதோ, ரவுடி போல் செயல்படுவதோ கூடாது. எதிர்க்கட்சிகளிடம் நாகரீகத்தை பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீகாரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பாஜக, ஜேடியு ஒரு அணியாகவும், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் செயல்படுகிறது. இந்த தேர்தலில் முந்தைய கருத்துக் கணிப்பிலும் சரி, பிந்தைய கருத்துக் கணிப்பிலும் சரி தேஜஸ்வி யாதவிற்கு சாதகமாகவே முடிவுகள் வந்துள்ளன.
இந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினம் முடிவுகள் என்னவாக இருந்தாலும் நாம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
கட்சியினர் யாரும் நிறங்களை பயன்படுத்துவதோ பட்டாசுகளை வெடிப்பதோ கூடாது. வெற்றியை கொண்டாடும் போது எந்தவிதமான ஒழுக்கமற்ற சம்பவங்களும் நடைபெறக் கூடாது என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications