சிறுமியை சுற்றிவளைத்த "பாய்ஸ்".. பலாத்காரம்! ஆசிரியரை கண்டதும் எஸ்கேப்! அடுத்து நடந்த பெரும் கொடூரம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் 14 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. பீகாரில் பொதுவாக காட்டு பகுதிகளில் இது போல வன்புணர்வு சம்பவங்கள் நடப்பது அதிகரித்து உள்ளது.

கழிப்பறையை பயன்படுத்த பெண்கள் வெளியே காட்டுப்பகுதிக்கு செல்லும் போது அவர்களை வன்புணர்வு செய்யும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதேபோன்ற ஒரு சம்பவம்தான் கைமூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு 14 வயது மாணவி ஒருவர் கழிப்பறையை பயன்படுத்த காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நான்கு இளம் வயது சிறுவர்கள் அந்த மாணவியை அங்கிருந்து தூக்கி சென்றுள்ளனர். காட்டு பகுதிக்கு உள்ளே கொண்டு சென்று அங்கே கட்டி வைத்துள்ளார். அங்கேயே மாறி மாறி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

மாறி மாறி அந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொடுமை செய்துள்ளனர். சிறுமியும் உதவிக்கு கூச்சல் போட்டு கத்தியுள்ளார். ஆனால் சிறுமிக்கு உதவ யாரும் வரவில்லை. இந்த நிலையில்தான் நான்கு நபர்களில் கடைசி ஆள் வன்புணர்வு செய்யும் போது அங்கேயே சுரேந்திர குமார் பாஸ்கர் என்ற அப்பகுதி பள்ளி ஹெட்மாஸ்டர் வந்து இருக்கிறார். அவரும் கழிப்பறைக்கு செல்வதற்காக அங்கே வந்து இருக்கிறார். இந்த ஆசிரியர் எதோ சத்தம் கேட்கிறதே என்று அவர்களை நோக்கி வந்துள்ளார்.

கொடூரம்

கொடூரம்

அப்போது மாணவியை 3 பேர் பலாத்காரம் செய்வதை கண்டு வேகமாக ஓடி வந்துள்ளார். இவர் வருவதை பார்த்து 4 பேரும் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர். அதன்பின் ஆடையின்றி கிடந்த மாணவியை பார்த்ததும் ஆசிரியர் சுரேந்திர குமார் பாஸ்கரும், அவரை பலாத்காரம் செய்துள்ளார். மாணவியை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்துள்ளார். இவர் அங்கு உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். அந்த மாணவியை ரத்தம் வடிய வடிய காட்டுப்பகுதியில் விட்டு சென்றுள்ளார் அந்த ஆசிரியர்.

 போலீஸ்

போலீஸ்


இதையடுத்து மாணவி நீண்ட நேரத்திற்கு பின் சுயநினைவு பெற்று, வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் புகாரில் தன்னை பலாத்காரம் செய்த 4 பேர் மீதும் அந்த மாணவி புகார் அளித்தார். அதேபோல் அந்த ஆசிரியர் மீதும் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். இதில் தற்போது போலீஸ் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+