படுக்கையறை விருந்தாளி.. பெண்களுடன் உல்லாசம்.. கர்ப்பமாக்கினால் பணம்.. திக்குமுக்காடிய ஜனம்.. ஆண்டவா
பாட்னா: நூதன விளம்பரத்தை கண்ட இளைஞர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போய்விட்டார்கள்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
புதுச்சேரியில் சில மாதங்களுக்கு முன்பு நூதன மோசடி ஒன்று நடந்தது.. அதாவது மர்மநபர் ஒருவர், குழந்தை பேறு மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறாராம். அந்த மருத்துவமனைக்கு வரும் பெண்களுடன், பாலியல் ரீதியான தொடர்பு கொண்டு கர்ப்பமாக்கினால், ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்றும் இதற்கு அட்வான்சாக ரூ.2 லட்சம் தரப்படும்" என்றும் தனக்கு தெரிந்த இளைஞர்களிடமெல்லாம் ஆசைவார்த்தை கூறிவந்துள்ளார்.

புது திட்டம்: இதைக் கேள்விப்பட்ட இளைஞர் ஒருவர் பேராசை கொண்டு, இந்த திட்டத்துக்கு சம்மதித்துள்ளார்.. பிறகு, இந்த திட்டத்தை செயல்படுத்த, அடையாள அட்டை, ஆதார் கார்டு, பேங்க் அக்கவுண்ட் போன்றவைகள் வேண்டும் என்று மர்ம நபர் கேட்கவும், இளைஞரும் வாட்ஸ்அப்பில் அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அடுத்த நிமிடமே, செல்போனுக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.49 ஆயிரம் ஆகியவற்றை இளைஞரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தன.. "இந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால் அப்ளிகேஷன் பூர்த்தி செய்வதற்கும், பதிவு கட்டணத்திற்கும் மட்டும் பணம் கட்ட வேண்டி வரும்" என்று மர்ம நபர் சொன்னாராம்.
மர்மநபர்: இளைஞரும் கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து ரூ.50 ஆயிரம் பணத்தை செலுத்திவிட்டார்... அதோடு சரி... அந்த மர்மநபரை காணவில்லை.. போன் போட்டாலும் எடுக்கவில்லை.. 5 லட்சம் ரூபாய் வங்கி கணக்கு வந்ததாக மெசேஜ் வந்ததே? அதுவும் பொய்.. இதற்கு பிறகுதான் மாகே போலீசுக்கு ஓடினார்.. பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்ற ஆஃபர் பெருத்த அதிர்ச்சியை அப்போது மீடியாக்களில் ஏற்படுத்தியிருந்தது.
இப்போது அதுபோலவே இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. பீகார் மாநிலம், நவாடா பகுதியில் "ஆல் இந்தியா பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி" என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
நிறுவனம்: அந்த விளம்பரத்தில், "இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களை கர்ப்பம் ஆக்கலாம். இதற்காக வைப்புத்தொகை செலுத்தினால் 13 லட்சம் ரூபாய் வழங்கப்படும். முதலில் 799 ரூபாய் செலுத்தி, நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு பெண்களின் புகைப்படங்கள் வழங்கப்படும்.
அவ்வாறு வழங்கப்படும் பெண்களின் அழகை பொறுத்து ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை வைப்புத்தொகை செலுத்தினால், அந்தப் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் அந்த நபருக்கு 13 லட்சம் ரூபாய் தொகை வழங்கப்படும். அப்படி கர்ப்பமாகாவிட்டாலும், 5 லட்சம் ரூபாய் ஆறுதல் தொகையாக வழங்கப்படும்" என்று விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆச்சரியம்: இதை பார்த்த இளைஞர்கள் திக்குமுக்காடிப்போனார்கள்.. இப்படி ஒரு ஆஃபரா என்று ஆச்சரியப்பட்டு, சம்பந்தப்பட்ட கம்பெனியில் பணத்தை செலுத்த துவங்கியிருக்கிறார்கள். ஆனால், கடைசிவரை பெண்களின் போட்டோக்களைகூட காட்டவில்லையாம்..
அதற்கு பிறகுதான் இவர்கள் மோசடி செய்வது உறுதியானது.. இதனால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்து, சைபர் கிரைம் போலீஸுக்கு ஓடினார்கள்.. விளம்பரத்தில் வந்த ஆஃபர் உட்பட அனைத்தையும் குறிப்பிட்டு புகார் தந்தனர்..

8 பேர் கைது: அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, 8 பேரை கைது செய்திருக்கிறார்கள். ஆனால், இதுக்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் முன்னா குமார் என்பவர்தானாம்.. இவர்தான் முக்கிய குற்றவாளி.. அவர் இப்போது தலைமறைவாகியுள்ளதால், அவரை பிடிப்பதற்காக போலீஸார் மும்முரமாகி உள்ளனர்.
ஆனால், இந்த கும்பலிடம் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள் போலீசார்.. அதனால், பாதிக்கப்பட்ட நபர்கள், தாங்களாகவே முன்வந்து புகார் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். "கர்ப்பமாக்கினாலும் பணம், கர்ப்பமாக்காவிட்டாலும் ஆறுதல் பணம்" என்ற இந்த விளம்பரம் பீகாரையே அதிர செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications