Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நொந்துப்போன ராகுல்.. வெறும் 6 சீட் தானா.. பீகார் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என புகார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி பீகார் தேர்தல் தோல்வி குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‛‛பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை'' என கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மாறாக எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று போராடிய எதிர்க்கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளன.

Rahul Gandhi Bihar Election 2025 Bihar Election Results 2025 2025

குறிப்பாக காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தற்போது ஒற்றை இலக்கத்துக்கு சரிந்துள்ளது.

வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியினர் பாஜக மோசடி செய்து வென்றதாக தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் SIR எனும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாஜக வென்றதாக காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்களும் கூறி வருகின்றன.

இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று இரவு கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ‛‛பீகாரில் மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை.

இந்த போராட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானது. காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தை காப்பாற்ற தேவையான முயற்சிகளை இன்னும் திறம்பட செய்யும்'' என்று கூறியுள்ளார்.

பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதி, நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+