Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்எல்ஏ கிடையாது.. ஆனாலும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பீகாரில் அமைச்சரான இன்ஜினியர்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் பதவியேற்றார். இவருடன் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவின்போது சாதாரண சட்டை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து மேடையில் ஏறிய சாப்ட்வேர் இன்ஜினியர் அமைச்சராக பதவியேற்று கொண்டார். எம்எல்ஏவாக இல்லாத அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் யார்? அவருக்கு ஏன் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாஜக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட கடந்த முறையை போல் முதல்வர் பதவியை ஜேடியூ கட்சிக்கு விட்டு கொடுத்துள்ளது. அதன்படி ஜேடியூ கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார். இது அவரது 10 வது முதல்வர் பதவியேற்பாகும்.

its-in-his-jeans-who-is-deepak-prakash-how-techie-who-didnt-fight-bihar-assembly-election-but-to

நிதிஷ் குமார் 2005 முதல் தொடர்ந்து (இடையில் சில மாதங்கள் மட்டும் ஜிதன்ராம் மஞ்சி முதல்வராக இருந்தார்) நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். நிதிஷ் குமாருடன் மொத்தம் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அனைவரும் கண்கவர் ஆடைகளான குர்தாஸ், பைஜாமா, வேஷ்டி அணிந்து மேடையில் ஏறி ஆளுநர் முகமது ஆரிப் கான் முன்னிலையில் பதவியேற்று கொண்டார். அவர் ஒவ்வொருவருக்கும் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த வேளையில் எம்எல்ஏவாக இல்லாத ஒரு இளைஞர் சாதாரண உடை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, அதையும் ‛டக்-இன்' செய்யாமல் மேடையில் ஏறி அமைச்சராக பதவியேற்று கொண்டார். இது அனைவரின் கவனத்தையும் பெற்றது. இதுதொடர்பாக வீடியோ இணையதளங்களில் வெளியாகி விவாதத்தையும் கிளப்பியது. யாருடா இவரு எம்எல்ஏ ஆகாமலேயே அமைச்சராகி உள்ளார். ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பதவி பிரமாணம் எடுக்கிறார் என்று பலரும் கேள்வி கேட்டனர்.

அதற்கு விடை கிடைத்துள்ளது. அந்த நபரின் பெயர் தீபக் பிரகாஷ். அவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். ஆம், பீகாரில் அமோக வெற்றி பெற்ற பாஜக கூட்டணியில் எந்த சட்டசபை தொகுதியிலும் போட்டியிடவில்லை. இதனால் அவர் தற்போது எம்எல்ஏவாகவும் இல்லை. இந்த தீபக் பிரகாஷின் தந்தை பெயர் உபேந்திர குஷ்வாகா. இவர் ஆர்எல்எம் எனும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவராக உள்ளார். இந்த கட்சி பாஜக கூட்டணியில் உள்ளது.

உபேந்திர குஷ்வாகா - அவரது மனைவி ஸ்நேக்லதா குஷ்வாகாவிற்கு பிறந்தவர் தான் இந்த தீபக்பிரகாஷ். உபேந்திர குஷ்வாஹா தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவரது மனைவி ஸ்நேக்லதா சாசாராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் அவர்களின் மகன் தீபக் பிரகாஷ் அமைச்சராகி உள்ளார்.

இவருக்கு வயது 36 தான் ஆகிறது. இவர் மணிப்பால் எம்ஐடியில் 2011ம் ஆண்டில் பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தார். அதன்பிறகு 4 ஆண்டுகள் ஐடி துறையில் பணியாற்றினார். சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றிய அவர் அவ்வப்போது தனது தந்தை உபேந்திர குஷ்வாகாவின் அரசியலுக்கும் பக்கப்பலமாக இருந்து வந்தார்.

இவர்களின் கட்சி பாஜக கூட்டணியில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அந்த பதவியை தான் தீபக் பிரகாஷ் பெற்றுள்ளார். முன்னதாக இந்த அமைச்சர் பதவி என்பது தீபக் பிரகாஷின் தாய் ஸ்நேலதா குஷ்வாகாவிற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் எம்எல்ஏவாகவும் இருப்பதால் அனைவரும் இதனை நினைத்தனர். ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக மகன் தீபக் பிரகாஷ் அமைச்சராகி உள்ளார்.

பொதுவாக ஒரு மாநிலத்தில் ஒருவர் அமைச்சராக வேண்டும் என்றால் அவர் எம்எல்ஏவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எல்சியாக(சட்டமேலவை உறுப்பினர்) இருக்க வேண்டும். இந்த 2 பொறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் இல்லாதவர்கள் அமைச்சராக பதவியேற்றால் அடுத்த 6 மாதங்களில் ஏதேனும் ஒரு பதவியில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இதனால் அடுத்த 6 மாதத்தில் தீபக் பிரகாஷ் பீகாரில் எம்எல்ஏ அல்லது எம்எல்சியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+