Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 வருடம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த லாலு..வாசற்படியிலேயே ஷாக் தந்த மகன்.. அடுத்த தலைவலி ஆரம்பம்

லாலு மகன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

பாட்னா: சுமார் 3 வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார் லாலு பிரசாத் யாதவ்.. இந்நிலையில், வீட்டின் முன்பு அவர் மூத்த மகன் தர்ணா செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

பீகார் அரசியலில் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ்.. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்தவர்.. பல முக்கிய பதவிகளையும் வகித்தவர்.. ஆனால், மாட்டுத்தீவண ஊழலில் சிக்கி ஜெயிலுக்கு போனார்.

இதன் காரணமாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.. டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றார்... விடுதலைக்குப் பிறகு டெல்லியில் உள்ள மகன் வீட்டில் தங்கியிருந்தார்.

 தொண்டர்கள்

தொண்டர்கள்

இறுதியிடல் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்று மாலை அவர் டெல்லியில் இருந்து பாட்னா ஏர்போர்ட்டுக்கு வந்தார்.. ஏர்போர்ட்டில் அவருக்கு ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்.. பிறகு அங்கிருந்து கிளம்பி நேராக வீட்டுக்கு சென்றார்... அபபோது அப்பாவை வரவேற்க லாலுவின் மகன்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் 2 பேரும் தயாராக இருந்தனர்.. 2 பேருமே சேர்ந்து லாலுவை வரவேற்றனர். இதை அங்கிருந்தோர் ஆச்சரியமாக பார்த்தனர்.

ஒற்றுமை

ஒற்றுமை

காரணம், இவர்கள் எப்பவுமே எலியும் பூனையாக சண்டை போட்டுக் கொள்பவர்கள்.. லாலுவுக்கு சமீபகாலமாக உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியை கைப்பற்ற அவரது மகன்கள் 2 பேரிடமும் கடுமையான போட்டி நிலவுகிறது... இப்படிப்பட்ட சூழலில்தான் இருவரும் ஒன்றாக ஒற்றுமையாக காட்சி தந்தனர்.. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த எண்ணம் தவிடுபொடியானது.

தர்ணா

தர்ணா

வீட்டுக்கு லாலு வந்து உட்கார்ந்தாரோ இல்லையா, உடனே மூத்த மகன் தேஜ் பிரதாப் குற்றச்சாட்டை ஆரம்பித்துவிட்டார்.. வீட்டுக்கு வந்த அப்பாவுடன் தன்னை பேசவிடவில்லை என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.. கட்சியில் தனக்கு மதிப்பில்லை என்று சொல்லி, வீடு முன்பே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 தலைவலி

தலைவலி

இதுதான் லாலுவுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவாகி உள்ளது.. காரணம், பீகாரில் வருகிற 30-ந் தேதி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று லாலுபிரசாத் ஒரு முடிவோடு இருக்கிறார். அதற்காக, 3 தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அங்கீகாரம்

அங்கீகாரம்

இதில் தேஜ்பிரதாப் யாதவ் தனக்கு உரிய அதிகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.. அதுமட்டுமல்ல, லாலுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அவர் விரைவில் புதிய முடிவு எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.. 3 வருடம் கழித்து வீடு திரும்பியிருக்கும் லாலுபிரசாத் யாதவ் இப்போது மிகவும் கவலை அடைந்துள்ளார்.. வீட்டு வாசற்படியிலேயே மகன் தகராறில் ஈடுபடுவது அந்த கட்சியின் மூத்த தலைவர்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+