"உடலுறவு.." பணக்கார பெண்களை கர்ப்பமாக்கினால் பல கோடி தரோம்! மோசடி பேர்வழிகளை தட்டி தூக்கிய போலீஸ்
பாட்னா: இளம் பெண்களுடன் உடலுறவு கொண்டு அவர்களைக் கர்ப்பமாக்கி பெரும் தொகை, சொத்தில் பங்கு தருவதாகச் சொல்லி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் சிக்கி இளைஞர்கள் பலரும் பெரிய தொகையை இழந்துள்ளனர். இந்த மோசடிக்கு காரணமானவர்களை இப்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் வாயிலாகப் பல மோசடிகள் அரங்கேறி வருகிறது. வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதே இவர்கள் நோக்கமாகும்.

இதுபோல ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு ஸ்டைலில் மோசடி செய்து வருகிறது. இதில் பெரும்பாலும் வேலையில்லாத இளைஞர்களும் ஏழைகளும் தான் ஏமாறுகிறார்கள். இதில் பல லட்ச ரூபாய் வரை கூட மக்கள் இழக்கிறார்கள்.
மோசடி:
அப்படி தான் கடந்த சில மாதங்களாக ஒரு புதுவித மோசடி அரங்கேறியது. அதாவது குழந்தையின்றி தவிக்கும் பணக்கார பெண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் அப்படி உடலுறவு கொண்டு பெண்களைக் கர்ப்பமாக்கினால் பெரும் தொகை தருவோம் என்றும் சொல்லி இளைஞர்களை மோசடி செய்தனர். இந்த மோசடி பேர்வழிகளைத் தான் இப்போது போலீசார் தூக்கியுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தான் இந்த மோசடியைச் செய்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அந்த 3 பேரையும் இப்போது பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள நவாடா மாவட்டத்தின் நர்டிகஞ்ச் என்ற பகுதியில் உள்ள கஹுவாரா கிராமத்தில் இருந்து இந்த மோசடியைச் செய்து வந்துள்ளனர்.
வேலையில்லாத இளைஞர்கள் குறி:
'All India Pregnant Job Service' என்ற பெயரில் இவர்கள் மோசடி செய்துள்ளனர். வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து மோசடி செய்து பெரிய பணத்தை ஏமாற்றியுள்ளனர். பணக்கார பெண்களைக் கர்ப்பமாக்குவோருக்கு 10 லட்சம் ரூபாய் கொடுப்போம் என முதலில் சொல்லுவார்கள். சில நேரம் சொத்தில் கூட பங்கு தருவதாகக் கூறுவார்களாம். ஒருவேளை கர்ப்பமாக்க முடியாவிட்டாலும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று சொல்லி இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர்.
இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், "நாங்கள் இப்போது மூன்று பேரைக் கைது செய்துள்ளோம். இவர்கள் முதலில் பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த விளம்பரத்தைப் பார்த்து இளைஞர்கள் பலரும் கால் செய்துள்ளனர். பிறகு அவர்களிடம் ரெஜிஸ்டிரேஷன் என்ற பெயரில் பான் கார்டு, ஆதார் அட்டை, செல்ஃபி போன்றவற்றைக் கேட்டு வாங்கியுள்ளனர். இவர்களைச் சொல்வதை நம்பி இந்த பிராசஸை முடிக்கும் இளைஞர்களிடம் பிறகு பணத்தைப் பிடுங்கத் தொடங்குவார்கள்" என்றனர்.
மூவர் கைது:
கைது செய்யப்பட்டவர்கள் பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள வாட்ஸ்அப் சேட்களை ஆய்வு செய்த போது யாரை எல்லாம் ஏமாற்றினர்.. எவ்வளவு பணத்தை மோசடி செய்தனர் என்பது தெரிய வந்துள்ளது.
பணம்:
இளைஞர்களிடம் முதலில் ஐடி கார்டு வழங்க எனச் சொல்லி ரூ.999 வாங்குவார்களாம். பிறகு ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம், பிராசஸிங் கட்டணம் என்று தொடர்ச்சியாகப் பணத்தை வாங்கிக் கொண்டே இருப்பார்களாம். ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சிலர் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகக் கூட பணத்தை இழந்துள்ளனர். இந்த கும்பலைத் தான் போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications