63 வயதிலும் அந்த ஆசை.. மசாஜ் அழகிக்கு ஆசைப்பட்ட மஞ்சுநாத்.. 5 லட்சம் போச்சு!
புதுச்சேரி: புதுச்சேரியில் அழகி கையால் மசாஜ் செய்து கொள்ள ஆசைப்பட்டு ரூ. 5 லட்சத்தை பறி கொடுத்துள்ளார் ஒரு தொழிலதிபர்.
புதுச்சேரி திருமுடிசேதுராமன் நகரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 63) தொழிலதிபர். அவ்வப்போது புதுவை லாஸ்பேட்டை லதா ஸ்டீல் ஹவுஸ் அருகே இருக்கும் மசாஜ் சென்டருக்குசெல்வது வழக்கம். அந்த மசாஜ் சென்டரை தட்டாஞ்சாவடி வீமன் நகரை சேர்ந்த ராஜேஷ் (எ) உதயா நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் ராஜேஷ், செல்போன் மூலம் மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டுள்ளார், அப்போது அவர் மசாஜ் சென்டரின் புதிய கிளை முதலியார்பேட்டை ஞானசம்மந்தர் வீதியில் திறந்திருப்பதாகவும், அங்கு இளம் அழகிகள் இருப்பதாகவும், வந்தால் அழகிகள் மசாஜ் செய்துவிடுவார்கள் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ஆசை யாரை விட்டது. இளம் அழகிகள் என்றதும், மஞ்சுநாத்துக்கு ஆசை அதிகமாகியுள்ளது. ஆனால் பயத்தின் காரணமாக ராஜேஷ் அழைத்ததும் செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் 2 நாட்கள் முன்னர் மீண்டும் ராஜேஷ் அவரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.
இதனையடுத்து நேற்று காலை ராஜேஷ் குறிப்பிட்ட இடத்திற்கு மஞ்சுநாத் சென்றுள்ளார். அங்கு சென்ற மஞ்சுநாத் அதிர்ச்சியடைந்தார். ராஜேஷ் கூறியதுபோல மசாஜ் செய்வதற்கான எந்த தடயமும் அங்கு இல்லை. அழகிகளும் இல்லை.
இதுகுறித்து அவர் ராஜேஷிடம் கேட்டபோது ராஜேஷ் அவரை மிரட்டியுள்ளார். பெண்ணாசையால் இங்கு வந்ததை எல்லோரிடமும் கூறிவிடுவேன் என அவர் கூறி, மஞ்சுநாத் வைத்திருந்த ரூபாய் 1000 ரொக்கப்பணம், அவரது விலை உயர்ந்த செல்போன், கைகடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டுள்ளார்.
அதோடு விடாமல் அவரது செல்போனில் கூகுள்பே மூலம் ரூபாய் 5 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இதுகுறித்து மஞ்சுநாத் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications