புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள்.. பாஜகவை சேர்ந்த மூன்று பேர் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

புதுவை: பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன், வி வி ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோரை புதுவையில் நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 33 சட்டசபை உறுப்பினர்கள் பதவி உள்ளன. அதில் 30 எம்எல்ஏக்கள் நேரடியாகத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள மூன்று பேரை மத்திய அரசு நியமனம் செய்யும்.

central government nominates three BJP member as MLAs in Puducherry

புதுவையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்றுள்ளது. என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த சில தினங்களுக்கு முன் புதுவை முதல்வராகப் பதவியேற்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட... புதுவை முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கைகொரோனாவால் பாதிக்கப்பட்ட... புதுவை முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கை

இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நியமன எம்எல்ஏக்களாக வெங்கடேசன், வி வி ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் ஆகியோரை மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, அதிமுகவுக்கு ஒரு நியமன எம்எல்ஏ வழங்க வேண்டும் எனப் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தற்போது பாஜகவைச் சேர்ந்த மூன்று பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

English summary
Puducherry nominated MLAs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X