கொரோனா வைரஸ் எதிரொலி.. சிக்கன் வேண்டாம், மட்டன் ஓகே.. தவிர்க்கும் மக்கள்.. கலக்கத்தில் வியாபாரிகள்!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் அச்சத்தால் புதுச்சேரியில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உண்ணுவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி இறைச்சியின் விலை கடுமையாக சரிந்துள்ளது.
Recommended Video
சீன நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.
இதுவரை கொரோனா வைரஸால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ்
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 16 பேர் மற்றும் கேரளா, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆக்ரா, காசியாபாத், தமிழ்நாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருமும் ரிங் டோன்
மேலும் தொலைபேசியில் ஒருவருக்கு நாம் அழைக்கும் போது ரிங் டோனுக்கு பதில், கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கடந்த இரண்டு தினங்களாக ஒலிக்கின்றன. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், தமிழகத்திலிருந்து செல்லும் கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனை கேரளாவில் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது.

சிக்கன் சரிவு
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உற்பத்தியாகும் கோழி மற்றும் முட்டைகளை இங்கேயே விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளதாலும், மக்களிடம் கொரோனா பீதி அதிகமாக உள்ளதாலும் கோழி இறைச்சியை தவிர்க்க துவங்கியுள்ளனர். இதன்காரணமாக புதுச்சேரியில் கடந்த வாரம் கிலோ ரூபாய் 140 க்கு விற்பனையான கோழி இறைச்சி தற்போது 100 ரூபாக்கு விற்பனையாகி வருகிறது.

மீன்
அதேபோல் 4 ரூபாய்க்கு விற்பனையான கோழி முட்டை 3 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் கோழி பண்ணை தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஆட்டுக்குறி, மீன் விற்பனை அதிகரித்துள்ளதால், அதன் விலை உயரும் அபாயமும் உள்ளது. ஆக, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மன நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications