கிரண்பேடிக்கு எதிரான புதுவை முதல்வர் நாராயணசாமியின் தொடர் போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி 2-வது நாளாக சனிக்கிழமை இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தார். இன்று 3-வது நாளாக இந்த போராட்டம் தொடருகிறது.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி- முதல்வர் நாராயணசாமி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்பது முதல்வர் நாராயணசாமியின் நிலைப்பாடு.
ஆனாலும் ஆளுநருக்கே அதிகாரம் என்பதா புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகளில் தொடர்ந்து தலையிடுகிறார் கிரண்பேடி. இதற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த முதல்வர் நாராயணசாமி 2 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

வெள்ளிக்கிழமை முதல் போராட்டம்
புதுவையில் ஆளுநர் மாளிகை முன்பாக வெள்ளிக்கிழமையன்று கிரண்பேடியை திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தை தொடங்கினார் முதல்வர் நாராயணசாமி. இரவிலும் அங்கேயே படுத்துறங்கி போராட்டத்தை தொடர்ந்தார் நாராயணசாமி.

சனிக்கிழமை இரவிலும் போராட்டம்
சனிக்கிழமை நேற்று பகலில் 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. நேற்று இரவும் போராட்ட களத்திலேயே படுத்துறங்கினார் முதல்வர் நாராயணசாமி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரண்பேடியை திரும்பப் பெறுங்கள் என்கிற கோரிக்கை பிரதமர் மோடியின் காதுகளை எட்டும் வரை இப்போராட்டம் நீடிக்கும் என்றார்.

இன்றும் நீடிக்கும் போராட்டம்
மேலும் தமது உயிருக்கு பயந்து கிரண்பேடி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார். கிரண்பேடியே திரும்பிப் போ; நரேந்திர மோடியே கிரண்பேடியை திரும்பப் பெறு; புதுச்சேரியை காப்போம்! மீட்போம் என்கிற முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும். ஞாயிற்றுக்கிழமையும் எங்கள் போராட்டம் நீடிக்கும். இதில் பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறினார் நாராயணசாமி.

பாதுகாப்பு தீவிரம்
இதனிடையே புதுவை ஆளுநர் மாளிகையை சுற்றி அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் புதுவையில் தொடர்ச்சியான அரசியல் பதற்றம் நீடித்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications