புதுச்சேரி பட்ஜெட்.. மத்திய அரசு ஒப்புதல்.. 12 ஆண்டுகளுக்கு பின் இன்று தாக்கலான முழு பட்ஜெட்

புதுச்சேரி சட்டசபையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கலாகிறது.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 12 ஆண்டுகளுக்கு பின் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டசபையில் கடந்த 12 வருடங்களாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. புதுச்சேரியில் கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது.

ஆனால் கடந்த வருடம் புதுச்சேரியில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கடந்த வருடம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியும் கூட தாக்கல் செய்யப்பட வேண்டிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

 துணை நிலை ஆளுநர்

துணை நிலை ஆளுநர்

கடந்த வருடம் வெறும் துணை நிலை ஆளுநர் தமிழிசையின் உரை மட்டுமே அங்கு நடந்தது. கடந்த வருடம் பட்ஜெட் சுமார் 11 ஆயிரம் கோடிக்கு இருக்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட்டிற்கு சாதகமான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட்டிற்கு எப்படியாவது அனுமதி வாங்க வேண்டும், மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூட நேரடியாக டெல்லிக்கு சென்று இருந்தார்.

சந்திப்பு

சந்திப்பு

இதற்காக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கூட இவர் சந்தித்தார். இதில் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி உதவி தர வேண்டும், 2000 கோடியை பட்ஜெட் தாக்கல் செய்ய கொடுக்க வேண்டும், மாநில அந்தஸ்து கொடுக்க உதவ வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்தார் ரங்கசாமி. ஆனாலும் புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் மீண்டும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டது. புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி.

சட்டசபை

சட்டசபை


இதையடுத்து புதுச்சேரி சட்டசபையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கலாகி உள்ளது.மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக முழு பட்ஜெட் தாக்கல் ஆகிறது. மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் ஆகிறது. பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் தமிழிசை தலைமையில் குழு கூட்டத்தின் முடிவுகள் மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது. இதையடுத்து பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த பட்ஜெட்டை விட இந்த முறை ரூ. 1000 கோடி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக நாடாளுமன்ற தேர்தல் வருவதால் அதற்கு ஏற்றபடி பல அறிவிப்புகளை ரங்கசாமி அரசு வெளியிட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த முறையே.. நாங்கள் திட்டங்களை நிறைவேற்ற பார்த்தோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை, என்று ரங்கசாமி வருத்தப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த முறை பட்ஜெட் விவகாரம் காரணமாக ரங்கசாமி - தமிழிசை இடையே கருத்து மோதலும் ஏற்பட்டது. அதன்பின் ரங்கசாமியை தமிழிசை நேரில் சந்தித்து விளக்கம் அளித்து சமாதானம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+