"அனைத்திலும் அரசியல் என்றால்.. நல்லுறவுடன் இருக்க முடியாது" சொல்கிறார் ஆளுநர் தமிழிசை.. என்னாச்சு
புதுச்சேரி: தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்து இருந்த நிலையில், இது தொடர்பாகத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களிலும் மாநில அரசுக்கும் சம்மந்தப்பட்ட மாநில ஆளுநர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
தமிழ்நாட்டிலும் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலே அவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.

தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்கள் எதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தது

தேநீர் விருந்து
அதேநேரம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றன. இந்தச் சூழலில் தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் தேநீர் விருந்தை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்திருந்தார். புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

புதுச்சேரி
இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது. இதையடுத்து திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தன. அதேநேரம் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

அரசியலாக்க வேண்டாம்
இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறுகையில், "ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இது தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல. அனைத்திலும் அரசியல் புகுத்தினால், யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது" என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications