புதுச்சேரியை கலக்கிய 'பிரியாணி'.. யாரு அந்த ஆபிசர்.. சொந்த ஊரையே நெகிழ வச்சிட்டாரே
புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த பண்டைய பூரநல்லூர் கிராமத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் இளங்கோ ஊக்கப்பரிசு வழங்கி கௌரவித்தார். அத்துடன் அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து மகிழ்வித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவ, மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். கூலி வேலைக்கு செல்வோரின் பிள்ளைகள், ஆட்டோ ஓட்டுநரின் பிள்ளைகள், விவசாய வேலை செய்வோரின் பிளைகள் பலர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் மதிப்பெண் பெறுவோரை உற்சாகப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கி கௌரவிப்பது, பாராட்டுவது போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் பரிசு வழங்கி கௌரவித்து வருகின்றன. இவை எல்லாம் இயல்பாக நடக்கும் நிகழ்வுகள் தான்.
ஆனால் புதுச்சேரி அருகே தனது கிராமத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் நேரில் அழைத்து விருந்து வைத்ததுடன், ஊக்கப்பரிசு அளித்து கௌரவித்துள்ளார்.

புதுச்சேரியை அடுத்த பண்டைய பூரநல்லூர் கிராமத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் இளங்கோ ஊக்கப்பரிசு வழங்கினார்.
தனது கிராமத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஒரு திருமண மண்டபத்தில் அழைத்து, அவர்களின் சாதனையை உயர்வாக பேசிய உதவி ஆய்வாளர் இளங்கோ, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உற்சாகமூட்டினார். பின்னர் மாணவ மாணவிகளை கௌரவித்ததுடன், இறுதியாக அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினார். இதனை பார்த்த ஊர் மக்கள் காவல் உதவி ஆய்வாளரை வெகுவாக பாராட்டினார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications