Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3.30 மணிக்கு மதிய உணவு.. பள்ளி குழந்தைகளை பட்டினி போடும் புதுச்சேரி அரசு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    3.30 மணிக்கு மதிய உணவு.. பள்ளி குழந்தைகளை பட்டினி போடும் புதுச்சேரி அரசு! - வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள், மாலை வீட்டிற்கு போகும் நேரத்தில் மதிய உணவு அளித்து வரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    புதுச்சேரி மாநில அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், மத்திய பாஜக அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்காமல் வஞ்சிப்பதன் காரணமாகவே புதுச்சேரியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.

    மேலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரிக்கான நிதியை தடுத்து நிறுத்தி, வளர்ச்சி திட்டங்களை முடக்குகிறார் என்பதும் ஆளும் கட்சியினரின் குற்றம்சாட்டாக உள்ளது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கு இடையே உள்ள மோதலால் எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் புதுச்சேரி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கைக்காசு

    கைக்காசு

    நிதி நெருக்கடியால் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு இல்லை. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு உணவு அளிக்க முடியவில்லை. இதையெல்லாம் தாண்டி, ஆம்புலன்சுக்கு டீசல் போடுவதற்கு கூட அரசிடம் பணம் இல்லை. இதனால் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது சொந்த பணம் ரூபாய் 3 லட்சத்தை டீசல் போடுவதற்காக வழங்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.

    பெட்ரோலுக்கு காசு இல்லை

    பெட்ரோலுக்கு காசு இல்லை

    நேற்றைய தினம் கூட சுமார் 2.30 கோடி பாக்கி வைக்கப்பட்டதால், அமைச்சர் கமலக்கண்ணனின் காருக்கே அரசு பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பப் மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரும் வேறு வழியின்றி பேருந்தில் பயணம் செய்ய தொடங்கிவிட்டார். நிலைமை இப்படியிருக்க நிதி நெருக்கடியால் அரசு பள்ளி மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தாமதமாகும் சத்துணவு

    தாமதமாகும் சத்துணவு

    புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மொத்தம் 418 அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. இவற்றில் படிக்கும் 1 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் 10 க்கும் மேற்பட்ட மத்திய சமையல் கூடங்களில் உணவு சமைக்கப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் மதிய உணவு மிகவும் தாமதமாக வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    லேட்டாக வரும் உணவு

    லேட்டாக வரும் உணவு

    தற்போது அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், புதுச்சேரி அருகே உள்ள குமாரப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள், மதிய உணவுக்காக பள்ளி வளாகத்தில் காத்திருக்கின்றனர். சரியாக 3.30 மணிக்கு ஒரு வேனில் மதிய உணவு கொண்டுவரப்பட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

    அதிருப்தியில் மக்கள்

    அதிருப்தியில் மக்கள்

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாகவே மதியம் 1 மணிக்கு வரவேண்டிய மதிய உணவு, மாலை 3.30 மணிக்கு வருவதாகவும், 45 நிமிடங்களில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் உணவு வழங்குவதால் மாணவர்கள் பசியோடு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    பணம் தராத அரசு

    பணம் தராத அரசு

    இதுகுறித்து உணவுகளை மத்திய சமையல் கூடத்தில் இருந்து வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டபோது, உணவுகளை பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பணிக்கான பணத்தை அரசு முறையாக வழங்காததால், ஒரே வாகனத்தை பயன்படுத்தி பல்வேறு பள்ளிகளுக்கு உணவு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதே, இந்த கால தாமதத்திற்கு காரணம் என தெரிவித்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+