காவிரியில் மூழ்கி 4 பேர் பலி.. ‛நிறையபேர் இருந்தும் யாருமே உதவல’.. 3 பேரை காப்பாற்றிய மாணவி உருக்கம்
கரூர் மாவட்டம் காவிரி கதவணையில் மூழ்கி புதுக்கோட்டை பிலிப்பட்டி அரசு பள்ளியின் 4 மாணவிகள் பலியான நிலையில் மாணவி கீர்த்தனா 3 பேரை காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை: கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் நேற்று இறந்தனர். இந்த விவகாரத்தில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் நேற்றைய சம்பவத்தில் 3 பேரை காப்பாற்றிய மாணவி கீர்த்தனா ‛நிறையபேர் இருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. உதவி கேட்டு கெஞ்சியும் கூட போலீஸ் கேஸ் ஆகிவிடும் என அவர்கள் உதவவில்லை' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிலிப்பட்டியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர்.
போட்டி முடிந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை காவிரி ஆற்றுக்கு சென்றனர். அப்போது சில மாணவிகள் தண்ணீருக்குள் தவறி விழுந்து தத்தளித்தனர்.

4 மாணவிகள் பலி
இதையடுத்து 4 மாணவிகளும் ஆற்றில் மூழ்கினர்.இதுபற்றி உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கியவர்களை தேடினர். அப்போது 4 மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். 6ம் வகுப்பு படித்த இனியா, லாவண்யா, 7 ம் வகுப்பு படித்த தமிழரசி, 8 ம் வகுப்பு படித்த சோபியா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

3 பேர் சஸ்பெண்ட்; ஒருவர் கைது
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் பொட்டுமணி, விளையாட்டு போட்டிக்கு மாணவிகளை அழைத்து சென்ற இடைநிலை ஆசிரியர் இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி என 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் இப்ராஹிமை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

3 பேரை காப்பாற்றிய மாணவி
இந்நிலையில் தான் காவிரி ஆற்றில் மாணவிகள் அடுத்தடுத்து விழுந்த நிலையில் கீர்த்தனா என்ற மாணவி 3 பேரை காப்பாற்றியது தெரியவந்துள்ளது. நீச்சல் தெரிந்த கீர்த்தனாவுக்கு வயது 13. இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த 3 மாணவிகளின் தலைமுடியை பிடித்து இழுத்து கரை சேர்த்துள்ளார். சாய் திவ்யதர்ஷினி, ரேணுகா உள்பட 3 பேரை காப்பாற்றினார். இந்நிலையில் மாணவி கீர்த்தனா நடந்தது என்ன? என்பது பற்றி விளக்கம் தெரிவித்துள்ளார். இதுபற்றி கீர்த்தனா கூறியதாவது:

ஆற்றில் குளித்த நபர்கள்
நாங்க கொங்குநாடு கல்லூரிக்கு விளையாட சென்றோம். கல்லூரியில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்தோம். இதையடுத்து பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்க தாமதமாகும் என்றனர். இதையடுத்து ஆறு பார்க்க வேண்டும் என்று சாரிடம் கூறினோம். இதையடுத்து ஆற்றுக்கு சென்றோம். அப்போது ஆற்றில் ஏற்கனவே சிலபேர் குளித்து கொண்டிருந்தனர். அவர்கள் அம்மன் கோவில் அருகே சென்று குளிக்கும்படி கூறினார்கள்.

நீச்சல் தெரிந்தும் மீளமுடியவில்லை
இதையடுத்து அம்மன் கோவில் அருகே சென்றோம். அங்கு ஆற்றில் ஆழம் பார்த்து வருவதாக சார் கூறினார். இந்த வேளையில் பிள்ளைகள் ஆற்றில் இறங்கினார்கள். திடீரென மண் சரிந்தது. இதனால் தண்ணீரில் தத்தளித்தனர். நாங்கள் சாய், திவ்யதர்ஷினி, ரேணுகா உள்ளிட்டோரை தலைமுடியை பிடித்து இழுத்து மீட்டோம். இந்த வேளையில் ஆற்றில் சுழல் மாதிரி ஒன்று வந்துவிட்டது. இதனால் நீச்சல் தெரிந்த மாணவி கூட சுழலுக்குள் சிக்கி கொண்டார். அந்த பெண் பெயர் லாவண்யா. அவர் நீச்சலடித்து முயன்று பார்த்தார். அவரால் வெளியே வர முடியவில்லை.

நிறையபேர் இருந்தும் உதவவில்லை
இதனால் நாங்கள் உதவி வேண்டும் என கத்தினோம். அப்போது ஆற்றின் ஓரத்தில் நிறையபேர் நின்றனர். உதவிக்கேட்டு கெஞ்சியும் யாரும் கூட வரவில்லை. போலீஸ் கேஸ் ஆகிவிடும் என அவர்கள் வரவில்லை. வலையை வைத்து காப்பாற்றுங்க என கூறியும் அவர்கள் உதவ முன்வரவில்லை. வலையை தாங்க என்று கேட்டபோது யாரும் தரவில்லை. இதனால் மாணவிகள் இறந்துவிட்டனர்'' என உருக்கமாக தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications