கடல் தாண்டி கல்யாணத்துக்கு வந்த சிங்கப்பூர் தொழில் அதிபர்.. புதுக்கோட்டையே மறக்க முடியாத சர்ப்ரைஸ்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடந்த தனது ஊழியரின் திருமணத்திற்கு கடல் கடந்து வந்த கலந்து கொண்டுள்ளார் சிங்கப்பூர் தொழிலதிபர். அத்துடன் தனது ஊழியர் படித்த அரசு பள்ளிக்கு சென்று அங்கு பயின்று வரும் மாணவர்களுக்கு லேப்டாப், ப்ரொஜெக்டர் மற்றும் ஸ்கிரீன் ப்ளே, புத்தகப்பை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கினார்.
புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தொழில் நிமித்தமாக வகிக்கிறார்கள். இதேபோல் வளைகுடா நாடுகளிலும் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாட்டில் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளாக டெல்டா மாவட்டங்கள் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சின்ன அம்மங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் அமுதா தம்பதியரின் மகன் ஜெயப்பிரகாஷ் என்பவர் சிங்கப்பூரில் உள்ள ஆக்டிவ் ஃபயர் புரடெக்சன் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயபால் அமுதா தம்பதி தங்களது மகன் ஜெயாபிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். பெண்ணையும் நிச்சயம் செய்து திருமணத்திற்கான அழைப்பிதழ்களை அச்சிடப்பட்டு உற்றார், உறவினர், நண்பர்களுக்கு திருமணத்திற்கான அழைப்பு விடுத்தனர்.
அதன்படியே ஜெயப்பிரகாஷ் தன்னுடைய திருமணத்திற்கு வருமாறு தனது முதலாளியும், சிங்கப்பூர் தொழில் அதிபருமான டொமினிக் ஆங் பாவ் லெங்கிற்கு அழைப்பிதழை வழங்கினார்.
இதனை தொடர்ந்து மணமகன் ஜெயப்பிரகாஷுக்கும் மணமகள் அன்புகனி என்பவருக்கும் ஊரணிபுரம் தனியார் மஹாலில் உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது
இந்நிலையில், ஜெயாபிரகாஷின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் தொழிலதிபர் டொமினிக் ஆங் பாவ் தனது குடும்பத்தினருடன் தமிழகம் வந்தார்.
தமிழகத்திற்கு வருகை தந்த டொமினிக் ஆங் பாவ் லெங் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை, பட்டுப் புடவை அணிந்து ஜெயபிரகாஷின் திருமண விழாவில் கலந்து கொண்டனர் .
இதனால் உற்சாகம் அடைந்த ஜெயபிரகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிங்கப்பூர் தொழில் அதிபர் டொமினிக் ஆங் பாவ் லெங்-கை ஊரின் எல்லையிலிருந்து சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க பாரம்பரிய முறைப்படி கை கூப்பி வணங்கி, தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.
திருமணம் முடிந்த பிறகு மணமக்களை வாழ்த்திய சிங்கப்பூர் தொழில் அதிபர் டொமினிக் ஆங் பாவ் லெங் குடும்பத்தினர் கல்யாண பந்தியில் அமர்ந்து அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் வீடு மற்றும் அந்த பகுதியை சிங்கப்பூர் தொழிலதிபர் டொமினிக் ஆங் பாவ் லெங் குடும்பத்தினர் சுற்றிப் பார்த்தனர்.
அதன் பின்னர் ஜெயப்பிரகாஷ் படித்த சின்ன அம்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்ற தொழில் அதிபர் டொமினிக் ஆங் பாவ் லெங் குடும்பத்தினர் , ஜெயபிரகாஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அங்கு பயின்று வரும் 65 மாணவர்களுக்கு ரூபாய் நான்கு லட்சம் மதிப்பீட்டில் லேப்டாப், ப்ரொஜெக்டர் மற்றும் ஸ்கிரீன் ப்ளே, பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றை வழங்கினர்.
மேலும் அந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர். மேலும் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கல்யாணத்திற்கு சொந்தக்காரர்களே மொய்களை அடுத்தவர்களிடம் கொடுத்து அனுப்பும்இந்த காலத்தில், தன்னிடம் பணிபுரியும் ஊழியரின் திருமணத்தில் கலந்து கொண்ட சிங்கப்பூர் தொழில் அதிபரின் செயலும், அவரது அன்பும் புதுக்கோட்டை மக்களை நெகிழ வைத்துள்ளது. அதிலும் தனது ஊழியர் படித்த அரசு தொடக்க பள்ளிக்கு போய் அவர் கொடுத்த சர்ப்ரைஸ் நிச்சயம் மறக்க முடியாத பரிசு என்று ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications