பீதியிலேயே வந்த விஜயபாஸ்கர்.. மனைவி ரம்யாவுடன் புதுக்கோட்டை கோர்ட்டில் நேரிலேயே ஆஜரானார்.. என்னாச்சு?
புதுக்கோட்டை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை, இன்று நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படியே, மனைவி ரம்யாவுடன் விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வருகிற 26ம் தேதிக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இப்போது விராலிமலை எம்எல்ஏவாக இருக்கிறார்.. இவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, நிறைய ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த 2016-21-ம் காலகட்டத்துக்குள் தன்னுடைய பெயரிலும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தார்களின் பெயரிலும், தான் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் பெயர்களிலும், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
லஞ்ச ஒழிப்பு: இதையடுத்து, கடந்த 2021-ல் அக்டோபர் மாதம், விஜயபாஸ்கர் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.. இந்த சோதனைகளில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரூ.23,85,700 பணம், தங்க நகைகள், கனரக வாகனங்கள், ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவித்திருந்தனர்.
மேலும், விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35,79,90,000 வரையிலும் சொத்து சேர்த்ததாக 2021 அக்டோபர் 17-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கும் பதிவு செய்திருந்தனர்.. இதில், அவரின் மனைவி ரம்யா பெயரும் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல, கடந்த மே மாதம் 22-ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீதான 216 பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.

இன்று நேரில் ஆஜர்: புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, நீதிமன்றம் மூலம் விஜயபாஸ்கருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், விஜயபாஸ்கர் கடந்த 5-ம் தேதி ஆஜராகினார்.. அப்போது, 29-ம் தேதி, விஜயபாஸ்கரும், அவரின் மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராக புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராக உள்ளார்.. மனைவியுடன் ஆஜராவதால், அதிமுகவில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications