இன்று காலை இப்படியா விடியணும்! டீ குடிக்க போனவர்களுக்கு நிகழ்ந்த துயரம்! விஜயபாஸ்கர் வேதனை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் அது குறித்த துயரத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்ட மண்ணின் மைந்தர் என்ற அடிப்படையில், அவர் ''இந்த துயரத்தை இந்தக் காலை இப்படியா விடிய வேண்டும்'' எனக் கேட்டுள்ளார். இது பற்றி விஜயபாஸ்கர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''புதுக்கோட்டை நமுணசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுங்கச் செய்தது.''
''இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், 3 வயது சிறுமி உட்பட 19 பேர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து, எனது அறிவுறுத்தலின்பேரில் நமது நகர கழக செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மருத்துவமனை விரைந்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.''
''படுகாயமடைந்தவர்களுக்கு உடனடியாக மேல் சிகிச்சைகளை வழங்குவதோடு, ஈடு செய்ய முடியாத இழப்பில் தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் தயவுகூர்ந்து கவனமாக இருங்கள். எவருடைய அலட்சியத்தாலும் அப்பாவி உயிர்கள் ஒருபோதும் பறிபோய்விடக்கூடாது!'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையே சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே தான் அதிகாலை நேரங்களில் அதிக விபத்துக்கள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications