ராமநாதபுரம் கடற்கரை மணலில் 4 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு.. நரபலியா?.. கொலையா?.. போலீஸ் விசாரணை
ராமநாதபுரம்: கடற்கரை மணலில் மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை நரபலியாக நடந்த கொலையா என்ற கோணத்தில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கடற்கரை மணலில் ஐந்திற்கும் மேற்பட்ட மனித தலை, கால், கை உள்ளிட்ட மனிதனின் பல்வேறு உடல் உறுப்பு பாகங்களின் எலும்புக் கூடுகள் மணலில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாசில்தார்
இது குறித்து வாலிநோக்கம் போலீஸார் கடலாடி தாசில்தார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து இந்த எலும்புக்
கூடுகள் பள்ளி மாணவர்களா அல்லது வேறு நபர்களா அல்லது நரபலி செய்யப்பட்டுள்ளவர்களா அல்லது கொலை செய்யப்பட்டு உள்ளார்களா என்ற பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

1500 மீனவ குடும்பங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ கூலித்தொழிலாளர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த நபர்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் புயல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சூறைக் காற்று வீசி வருகிறது.

4 எலும்புக் கூடுகள்
இதனால் மணல் அரிப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை மாலை மணலில் புதைக்கப்பட்ட 4 எலும்பு
கூடுகள் வெளியே தெரிந்ததையடுத்து அப்பகுதியினர் போலீசார், வருவாய் துறை அதிகாரிளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வாலிநோக்கம் போலீஸார், கடலாடி தாசில்தார் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

சோதனை
இந்த எலும்புக் கூடுகள் சோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications