பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு
ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறப்பு புலன்விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளிட்டுள்ள அறிக்கையில், "இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சிலர் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 5/2023 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன்விசாரணை செய்யும் பொருட்டு, முனைவர் C. சைலேந்திர பாபு, இ.கா.ப., தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CB CID) மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் சிகாமணி 44, புதுமலர் பிரபாகரன் 42, ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது 36, உடந்தையாக இருந்த கயல்விழி 45, அன்னலட்சுமி 34, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆயிர வைசிய சபையின் சார்பில் பரமக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது பரமக்குடி நகரில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களைத் திரட்டி மகாத்மா காந்தியின் சிலை முன்பு கண்டன உரை நிகழ்த்தி தமிழக அரசின் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் தான் சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications