ராமநாதபுரம் அருகே மணமேடையில் மணமகள்.. கடைசி நேரத்தில் கம்பி நீட்டிய மாப்பிள்ளை.. என்னாச்சு?
ராமநாதபுரம்: நல்ல படிச்ச பிள்ளை.. கல்யாணம் முடிஞ்சிருந்தா இந்நேரம் அந்த பிள்ளை மறுவீடு போயிருக்கும்.. ஏன் இப்படி அந்த மணமகன் செய்தார் என்று மொத்த ஊரும் ராமநாதபுரம் அருகே கேள்வி எழுப்பி வருகிறது. ராமநாதபுரம் அருகே மணக்கோலத்தில் மணமேடையில் மணமகள் காத்திருந்த நிலையில், திடீரென மணமகன் மாயமானதால் திருமணம் நின்றுபோனது. இதனால் மணமகளின் வீட்டார் ஆடிப்போனார்கள். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதாக சொல்வார்கள்.. ஆனால் திருமணம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்காக எடுக்கும் முடிவாகும். பெற்றோர் பார்த்து வைத்து திருமணம் செய்தாலும், அவர்களாக காதல் செய்து திருமணம் செய்தாலும், இருவருக்கும் இடையே சரியான புரிதல் இருந்தால் பிரச்சனை இருக்காது.. மாறாக திருமணம் ஆகப்போகிறவர்களிடையே புரிதல் இல்லாமல் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் சிக்கல் வரலாம்..

திருமணம் நாளை என்கிற நிலை இன்று மணமகன் அல்லது மணமகள் ஓடிப்போகும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காதல் காரணம் என்றாலும், திருமணம் செய்து கொள்ளப்போகும் துணை குறித்து திடீரென எழும்பும் சந்தேகமும், யாராவது கிளப்பிவிடும் வதந்தியும் காரணமாக உள்ளது. ஒரு பெண் சிரித்து பேசி மகிழ்ச்சியாக எல்லாரிடமும் பேசக்கூடியவர் என்றால், அவரை பற்றி தவறாக கருத்துக்களை பரப்புவது அதிகமாக உள்ளது. அதேபோல் திடீரென அந்த பெண் மீது சந்தேகப்பட்டு ஒதுங்கி செல்வதும் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலப்பெருங்கரை என்ற கிராமத்தில் இன்று காலை நடைபெற இருந்த திருமணம் திடீரென நின்று போனது. மணமகன் மணமேடைக்கு வராமல் மாயமானால் திருமணம் நின்றுபோயிருக்கிறது. இதுபற்றி பெண் வீட்டார் பரமக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும், பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
மணப்பெண் மணக்கோலத்தில் மணமேடையில் திருமணத்திற்கு காத்திருந்த நிலையில், மணமகன் பாண்டி திடீரென மாயமானார்.. இதனால் உறவினர்கள் ஆடிப்போனார்கள். மணமகனின் தந்தை இதுபற்றி கூறும் போது, பெண்ணின் நடத்தை சரியில்லை என்று தாமதமாக தெரியவந்ததால் மாயமாகிவிட்டதாக கூறியிருக்கிறார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார் பரமக்குடி காவல் நிலையத்தில் மணமகன் பாண்டி உள்ளிட்ட குடும்பத்தினர் மீது புகார் அளித்தனர். மணமகள் வீட்டில் அலங்காரம், சாப்பாடு எல்லாமே தயாரான பின்னர் திடீரென மணமகன் பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறி எங்கோ மாயமான சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications