தமிழகத்தில் முதல் முறையாக பரமக்குடியில் தங்க நகை கடன் பெறும் ஏடிஎம்.. எப்படி செயல்படுகிறது தெரியுமா?
ராமநாதபுரம்: தமிழகத்தில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தங்க கடன் ஏடிஎம் திட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. பரமக்குடி வங்கி வாடிக்கையாளர்களுக்கு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் இந்த தங்க நகை ஏடிஎம் திட்டத்தைதொடங்கி வைத்துள்ளார்.இந்த திட்டப்படி 12 அல்லது 13 நிமிடங்களில் தங்க நகை கடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்க நகைக்கடன் பெற வேண்டும் என்றால், பொதுவாக வங்கிகளில் அதற்கு என்று உள்ள நகைமதிப்பீட்டாளரிடம் நகைகளுடன் செல்ல வேண்டும். நமக்கு அதே வங்கியில் வங்கி கணக்கு இருக்க வேண்டும். அதே வங்கி ஆனால் வேறு கிளை என்றால், செக் புக் இருந்தால் சோதித்துவிட்டு நகைக்கடன் தருவார்கள்.நகைக்கடன் தருவதற்கு நகை உண்மையில் தங்கம் தானா என்பதை உரசி பார்த்து சோதிப்பார்.இறுதியில் அது தங்கம்என்பதை உறுதி செய்த பின்னர், எடையை கவனிப்பார். அத்துடன் நகை 18 கேரட் தங்கமா அல்லது 20 கேரட் தங்கமா அல்லது 22 கேரட் தங்கமா அல்லது 24 கேரட் தங்கமா என்பதையும் பார்ப்பார்.

மேலும் நகையில் 916 முத்திரை உள்ளதா என்பதையும் பார்ப்போம். ஒவ்வொருன்றும் ஒவ்வொரு மதிப்பு என்பதால், அதற்கு தகுந்தாற்போல் நகைக்கடன் வழங்குவார். நகைக்கடன் வழங்க, ஒரு விண்ணப்பமும் இறுதியாக தருவார். அதில் நமது பெயர், ஊர், முகவரி, 10 க்கும் மேற்பட்ட கையெழுத்து உள்ளிட்டவற்றை தர வேண்டும். இறுதியாக அதனை கணினியில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு, வங்கியில் நமது பெயரில் லோன் கணக்கு ஓபன் செய்து, அதில் நமது பெயரில் எவ்வளவு பணம் கேட்கிறமோ அதனை தருவார்கள்.
அந்த பணம் நமது வங்கி கணக்கு போகும். அதை ஏடிஎம்மில் எடுக்கலாம். அல்லது அதே வங்கி கிளை என்றால், சலானில் நிரப்பி எடுக்கலாம். இதுதான் எல்லா வங்கியிலும் உள்ள நடைமுறை. இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தங்க கடன் ஏடிஎம் திட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணி நகர் அருகே சென்ட்ரல் பாங்க் ஆஃ ப் இந்தியா கிளை செயல்பட்டு வருகிறது இங்கு அப்பகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தங்க நகை கடன் பெரும் வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்து வருவதால் இங்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய தங்க கடன் ஏடிஎம் அமைப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்து. இந்நிலையில் நேற்று அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அலுவலருமான மாதம் வெங்கடராவ் தங்க கடன் ஏடிஎம் ஐ வாடிக்கையாளரின் பயன்பாட்டுக்கு துவங்கி வைத்தார். முன்னதாக மாதம் வெங்கடராவை வங்கி ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து ஜெனரல் பேங்க் ஆப் இந்தியாவை உருவாக்கிய சொராப்ஜி போச்கனாவாலாவின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி குத்துவிளக்கு ஏற்றியும் மரியாதை செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் . இதில் பரமக்குடி கிளை வங்கி ஊழியர்கள், மண்டல பிராந்திய, தலைவர்கள் மற்றும் பரமக்குடி வங்கி மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்து சிறப்பித்தனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெனரல் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மாதம் வெங்கடராவ் இந்த தங்க நகை கடன் பெரும் ஏடிஎம் ஆனது , உலகத்திலேயே இது இரண்டாவது முறை என்றும் தமிழகத்தில் இந்த தொழில்நுட்ப முறை முதல் முறை என்றும் தெரிவித்ததோடு மட்டுமின்றி பரமக்குடி கிளை தேர்வு செய்வதின் நோக்கமே இங்கு அதிகம் தங்க நகை கடன் பெறும் வாடிக்கையாளர்கள் அதிகம் இருப்பதால் மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு எளிதில் தங்க நகை கடன் கிடைக்க ஏடிஎம் ஆனது வழிவகை செய்யும் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். இந்த திட்டப்படி 12 அல்லது 13 நிமிடங்களில் தங்க நகை கடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications