Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துடிக்கத் துடிக்க.. 15 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை! சோகத்தில் ராமேஸ்வரம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களையும் அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பாக ஏராளமான மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக் கொண்டு இருந்த நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டு இருந்ததாக கூறி கைது செய்து உள்ளார்கள்.

Sri Lankan navy arrests 13 Tamil Nadu fishermen from Rameshwaram and seized their boats today

15 மீனவர்களையும் 2 படகுகளையும் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதால் ராமேஸ்வரத்தில் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் காங்கேசந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் துயரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுத்து அட்டூழியம் செய்து வருகிறார்கள் இலங்கை கடற்படையினர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என மீனவர்கள் பல முறை கோரிக்கை வைத்தும் பயனில்லை. மத்திய மாநில அரசுகள் தரப்பிலும் இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்கு செவி மடுக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஏராளமான மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் என்பதால் மே மாதம் பெரிதாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் மீன்பிடித்தடைக் காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றவுடன் இலங்கை கடற்படை வேலையை தொடங்கிவிட்டது.

ஜூன் மாதம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களின் படகு காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் பழுதாகி கச்சத்தீவில் தரை தட்டி நின்றது. அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்று உள்ளார்கள்.

அதன் பின்னர் அவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர். 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+