முகூர்த்த நேரத்தில் தாலியை பிடுங்கிய மணப்பெண்.. அடுத்த நடந்த ட்விஸ்ட்.. மாப்பிள்ளை கண்ணீர்
ராமநாதபுரம்: முகூர்த்த நேரத்தில் மணமகனிடம் இருந்து தாலியை பறித்த மணப்பெண் கோயில் உண்டியலில் போடச்சொல்லியதுடன், திருமணத்தை நடத்தவிடவே இல்லை. இது ஒருபுறம் எனில், திருமணம் நின்றது தெரியாமல் விருந்து சாப்பிட்டு உறவினர்கள் மொய் எழுதிவிட்டு சென்றுள்ளார்கள்.இந்தசம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்துள்ளது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயப்படுவதாக கூறுவார்கள். ஆனால் பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் தான் பெரும்பாலும் நடக்கும். இந்நிலையில் திருமணம் என்பது யாரையும் வற்புறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ பெற்றோர் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே நடந்துள்ளது.

திருவாடானை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயதான இளைஞர், டிகிரி முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 21 வயதான பெண்ணுக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆகஸ்ட் 21ம் தேதியான நேற்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர், திருமணம் செய்ய மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்திருந்தனர்.
திங்கள்கிழமையான நேற்று திருவாடானையில் ஒரு கோவிலில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக பத்திரிக்கை அடித்து விநியோகம் செய்யப்பட்டது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சபையில் அனைவரும் நிறைந்து இருந்தனர்.
முகூர்த்த நேரத்தில் மணமகளும், மணமகனும் திருமணம் நடத்தப்படும் இடத்திற்கு வந்தனர்.அங்கு உறவினர்கள் முன்னிலையில் மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகளும் நடைபெற்றது. இந்த நிலையில் மணமகன், மணமகளின் கழுத்தில் தாலியை கட்ட முயன்றார்.
அப்போது திடீரென்று மணப்பெண், மணமகனிடம் இருந்து தாலியை பறித்தார். அதனை தன் கையில் வைத்துக் கொண்டார். மணப்பெண்ணின் இந்த செயலால் மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்த உறவினர்கள், அந்தப் பெண்ணிடம் தாலியை கொடுக்குமாறு வற்புறுத்தினர்.
ஆனால் அந்தப் பெண் விடாப்பிடியாக தாலியை தர மாட்டேன். உண்டியலில் தான் போடுவேன் எனக்கூறினார். இதனால் மனவீட்டார் அனைவரும் திகைத்தனர். பின்னர் அந்த பெண், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறினார. இதைத்தொடர்ந்து அங்கிருந்த உறவினர்கள் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
உடனே மணமகன் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததார். உடனே போலீசாரும், கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
"திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.3 லட்சத்துக்கு மேல் பணம் செலவாகி உள்ளது. எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே மணப்பெண், அவருடைய பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மணமகன் வேதனையுடன் புகார் கூறினார். மணப்பெண்ணோ, "தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கட்டாயத்தினால் சம்மதம் தெரிவித்தேன்" என பெற்றோர் மீது பதில் புகார் அளித்தார்.
இதற்கிடையே மணமகளின் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு சீர்வரிசை பொருட்களும் சென்று இருந்தன. மாப்பிள்ளை வீட்டில் திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடந்த நிகழ்வுகள் பற்றி அறியாமல் அங்கு சாப்பிட்டு விட்டு மொய் எழுதி சென்றிருக்கிறார்கள்.
கோவிலில் உறவினர்கள் முன்னிலையில், மணப்பெண்ணே தாலியை பறித்து திருமணத்தை நிறுத்தியது ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் பிடிக்கவில்லை என்றால் ஏற்கனவே கூறியிருக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் மணப்பெண் இப்படி செய்தது மாப்பிள்ளையை மிகவும் வேதனையில் ஆழ்த்தி விட்டது என்றும் மணமகனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications