200 ரூபாய்க்காக இங்கு வரல சார்.. ஓ பன்னீர்செல்வத்தை அதிரவைத்த ராமநாதபுரம் ராதிகா.. மிரள வைத்த பேச்சு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: "எவன் பொம்பள புள்ளைய தொடுறானோ அவன் தலையை வெட்ட வேண்டும்.. இல்லாவிட்டால் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்" என்று ராமநாதபுரத்திதைச் சேர்ந்த பெண் ஓ பன்னீர்செல்வத்திடம் ஆவேசமாக முறையிட்டார். நாங்க ஒண்ணும் 200 ரூபாய்காக இங்கு வரவிலலை என்று பெண் ஒருவர் சொல்லிவிட்டு சென்றார். அந்த சிங்கப் பெண்ணின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

17வது லோச்சபாவின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் லோச்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அறிவித்தது.

What are the two requests of Ramanathapuratham Radhika to O Panneerselvam

இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற போகிறது. தேர்தல் இன்னும் 2 வாரத்தில் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தரை திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன. பாஜக கூட்டணி 2014 பாணியில் அதிமுக, அதிமுக உடன் கூட்டணி இல்லாமல் தனி அணி அமைத்து களம் கண்டுள்ளது. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழக வெற்றிக்கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

What are the two requests of Ramanathapuratham Radhika to O Panneerselvam

இதில் ஓபிஎஸ் அணி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது. அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினை உருவாக்கி உள்ள ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் தற்போது ராமநாதபுரம் தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ பன்னீர்செல்வத்திடம் ராதிகா என்ற பெண் வந்து பேசினார். அப்போது ராதிகா கூறுகையில், "நீங்க ஆட்சிக்கு வந்தீங்க அப்படீன்னா, இதை மட்டும் அமல்படுத்துங்க.. எவன் பொம்பள புள்ளைய தொடுறானோ அவன் தலையை வெட்ட வேண்டும்.. இல்லாவிட்டால் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.. அதை மட்டும் செய்யுங்க.. 12 மணிக்கு கூட வெளியில் போக முடியவில்லை.. சுதந்திரமே இல்லை..

What are the two requests of Ramanathapuratham Radhika to O Panneerselvam

பலாப்பழம் வெளியில் முள்ளாக இருக்கும்.. ஆனால் உள்ளே இருப்பதை சாப்பிட்டால் தித்திக்கும்.. அதுபோல் உங்கள் ஆட்சி மத்தியில் (பாஜக) வரட்டும். எங்கள் ஊருக்கு பஸ் கிடையாது.. இரண்டு பஸ் தான் வருது. காலையில் ஒன்று, மாலையில் ஒன்று தான் வருகிறது.. நாங்கள் எங்கள் ஊரான புதூரில் இருந்து 3 மைல் தூரம் நடந்து வர வேண்டும்.. ஆட்டோவிற்கு பைசாக கொடுத்து வரவேண்டும்.. இல்லாதவர்கள் இந்த வெயிலில் நடந்து தான் வர வேண்டும்... பஸ்ஸில் போக ஒரு ஏற்பாடு பண்ணிக் கொடுங்கள் என்றார்.

அதனை ஏற்றுக்கொண்டு ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், இங்கே நம்மிடம் இந்த பெண்மணி இரண்டு கோரிக்கைகள் முன்வைத்துள்ளார். தேவையான பஸ் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்களும் நாங்களும் சிரமப்படுகிறோம் என்று கூறினார். அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார். அதேபோல் பாதுகாப்பாக சென்றுவர முடியவில்லை என்று பெண் கூறியிருந்தார்.அது பற்றி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஓபிஎஸ். அப்போது அந்த பெண் ராதிகா, கோரிக்கைகள் குறித்து தொடர்பாக பேசிக் கொண்டிருந்தவர் 200ரூபாய்க்காக இங்கு வரவில்லை சார்.. கோரிக்கையை வைக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு வந்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறி அதிர வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+