பாம்பன் பாலத்தில் திடீரென எரிந்த சிகப்பு சிக்னல்! 56வது தூணில் பொருத்தப்பட்ட கருவி! என்ன டிவைஸ் அது?
ராமேஸ்வரம்: டிட்வா புயல் என்றில்லை, எந்த புயல், காற்றழுத்தம் என்றாலும் ராமேஸ்வரம் பாம்பனில் உள்ள புதிய பாலத்தில் ரயில்கள் மேலும் பயணிக்காத வண்ணம் சிகப்பு சிக்னல் தானாகவே காட்டப்படுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் இருந்து புயல் நகர்ந்து டெல்டா பக்கத்தில் சென்றிருந்தாலும் ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராமேஸ்வரம் அருகே கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஓலைகுடா கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.
ஓலைகுடா கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் சாலை சேதமடைந்ததால் அங்குள்ள மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் நேற்று பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. காற்றும் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசியது. இதனால் பாம்பன் பாலம் வழியே செல்ல இருந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் மண்டபம் பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்றும் இரண்டாவது நாளாக பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அலையானது தூக்கு பாலத்தில் தெறிக்கும் அளவுக்கு வீரியம் கொண்டதாக இருக்கிறது.
பாம்பன் பாலத்தில் ரயில்கள் தானாகவே சிகப்பு சிக்னல் காட்டப்பட்டது. இது எப்படி என்பதை பார்க்கலாம். பாம்பன் பாலத்தின் நடுவே 56 ஆவது தூண் பகுதியில் அனிமோமீட்டர் என்ற கருவி வைக்கப்பட்டுள்ளது. இது காற்றின் வேகத்தில் அளக்கும் கருவியாகும்.
காற்றானது 58 கி.மீ. வேகத்தில் வீசினால் இந்த அனிமோமீட்டர் கருவி தனது இயக்கத்தை தொடங்கி ரயில்களுக்கு சிகப்பு சிக்னலை காட்டி ரயில்கள் அந்த பாலத்தை கடக்கவிடாமல் தடுக்கும். இது முற்றிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
காற்றின் வேகம் குறைந்ததும் அதுவாகவே பச்சை சிக்னல் காட்டிவிடும். பாலத்தில் இருக்கும் சிக்னல்களுடன் இந்த அனிமோமீட்டர் இணைக்கப்பட்டுள்ளதால் தானாகவே சிகப்பு சிக்னலை காட்டி ரயில் பாலத்தில் பயணிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.
இதே போல் கோயம்பேடு, ஆலந்தூர், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த அனிமோமீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. வர்தா புயலின் போது காற்று மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் வீசிய போது ரயில் இயக்கமானது ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. தெற்கு ரயில்வே பாம்பன் பாலம் உள்பட 5 பாலங்களில் இந்த கருவியை பொருத்தியுள்ளது.
டிட்வா புயல் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காரைக்காலில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு- தென்கிழக்கை 330 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் சென்னை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இது இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா, வட இலங்கை கடல் பகுதிகளை இன்று காலை வந்தடைந்தது. பொதுவாக காற்றின் வேகம் 63 கி.மீ. முதல் 83 கி.மீ. வரை இருந்தால் மட்டுமே அது புயல். தற்போது வரை 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும்போது புயல் காற்று சுழற்சியின் மைய வேகம் 70 முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications