திருமணமாகாத விரக்தி.. மாரியம்மன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்த இளைஞர் கைது
சேலம்: சேலம் அருகே திருமணமாகாத விரக்தியில் மாரியம்மன் திருக்கோவிலில் சாமி சிலைகளை உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கன்னங்குறிச்சி ஆத்துக்காடு பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று காலை பொதுமக்கள் வழிபாடு நடத்த சென்றபோது கோவில் வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நவக்கிரக சிலைகளில் கேது, சூரியன், புதன் உள்ளிட்ட 5 சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் உதவி ஆணையாளர் ஆனந்த்குமார் தலைமையிலான கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் சாமி சிலைகளை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து சதீஷை போலீசார் கைது செய்தனர். தாயை இழந்து சித்தி வீட்டில் தங்கியிருந்த சதீஷ் திருமணமாகாத விரக்தியில் சாமி சிலைகளை உடைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications